அஜய் ஞானமுத்து இயக்கத்தில் சியான் விக்ரம் நடித்துள்ள திரைப்படம் கோப்ரா. இதில்,ஸ்ரீநிதி ஷெட்டி கதாநாயகியாக நடிக்க, இவர்களுடன்,இர்ஃபான் பதான், ஆனந்த ராஜ், ரோபோ ஷங்கர், மியா ஜார்ஜ், மிர்னாலினி ரவி, பூவையார், கே.எஸ்.ரவிக்குமார் உள்ளிட்ட நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
கொரோனா காரணமாக நிறுத்திவைக்கப்பட்டிருந்த இதன் படப்பிடிப்பு தற்போது மீண்டும் தொடங்கி,தொடர்ந்து நடந்து வருகிறது. இந்நிலையில் இப் படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது. கணித வாத்தியார் என்ற போர் வையில் விக்ரம் செய்து வரும் குற்றங்களை கண்டு பிடிக்கும் அஸ்லான் இல்மாஸ் எனும் இன்டர்போல் அதிகாரியாக நடித்துள்ளார் இர்ஃபான் பதான்.இவருக்கு இதுதான் முதல் படம் என்பது குறிப்பிடத்தக்கது.