பொங்கலுக்கு வெளியாக உள்ள மாஸ்டர்,ஈஸ்வரன் உள்ளிட்ட படங்களுக்கு திரையரங்குகளில் ‘100’ சதவீத இருக்கைகளுக்கு அனுமதி கோரி சமீபத்தில் நடிகர் விஜய் உள்ளிட்டவர்கள் முதல்வர் எட்டப்பாடியை சந்தித்து கோரிக்கை வைத்தனர்.
இதையடுத்து நூறு சதவிகித இருக்கைக்கு தமிழக அரசு அனுமதி அளித்தது. ஆனால், இதை எதிர்த்த மத்திய அரசு, ஐம்பது சதவிகித பார்வையாளர்களுக்கு மட்டுமே அனுமதி தர வேண்டும் என்று தமிழக அரசின் தலைமை செயலாளருக்கு கடிதம் அனுப்பியது.
மருத்துவர்களும், சமூக ஆர்வலர்களும் எதிர்ப்பு தெரிவித்தனர். நீதிமன்றமும் கண்டித்தது.இதனால், அந்த அறிவிப்பை வாபஸ் பெற்ற தமிழக அரசு, 50 சதவிகித பார்வையாளர்களுக்கு மட்டுமே அனுமதி அளித்து உத்தரவிட்டது.
அதேசமயம் கூடுதல் காட்சிகளை திரையிட்டுக் கொள்ள அரசு அனுமதி அளித்துள்ளது. அதனால் பொங்கல் பண்டிகைக்கு மாஸ்டர்,ஈஸ்வரன் படங்களுக்கு கூடுதலாக, இரண்டு காட்சிகளை திரையிட திரையரங்க உரிமையாளர்கள் முடிவு செய்துள்ளனர்.
அதன்படி வரும் 13 ஆம் தேதி முதல் 5 நாட்களுக்கு,அதாவது, 17 ஆம் தேதி வரை, மொத்தம் 6 காட்சிகளை திரையிட முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.