
பிரியங்கா சோப்ரா மீது பாலிவுட் நடிகர்கள் பைத்தியமாக இருந்தார்கள். அதிலும் மான் வேட்டைக்காரர் சல்மான்கானுக்கு சொல்லவே வேணாம்.
பாலிவுட் நடிகர்கள் கன்னி வேட்டைக்காரர்கள் என்பது ஊர் அறிந்த ரகசியம்.
ஆனால் பிரியங்கா இந்திய கோடீஸ்வரர்களுக்கு ‘பய்..பய் ‘சொல்லிவிட்டு இங்கிலாந்துக்காரருக்கு மாலை சூட்டி மணாளனாக்கிக்கொண்டார்.
நிக் ஜோன்ஸ் .பாடகர். பிரியங்காவை விட பத்து வயசு சின்னவர்.
“என்னம்மா ,இப்படி பண்ணிட்டிங்களே வயசு வித்தியாசம் ரொம்பவும் இடிக்கிதே ” என்று ஒரு ஆங்கில பத்திரிகையாளர் கவலைப்பட்டதற்கு “அதெல்லாம் பிரச்னையே இல்லை. !எங்களுக்கிடையில் நல்ல உறவு இருக்கிறது. என்னை புரிந்துகொண்டு வாழ்கிறார். இந்திய கலாச்சாரம் அவருக்கு தெரிந்து இருக்கிறது.” என்றவர் தன்னுடைய பெரிய ஆசையையும் சொல்லி இருக்கிறார்.
அப்படியென்ன பெரிய ஆசை என்கிறீர்களா?
“பத்து பிள்ளைகளாவது பெற்றுக் கொள்ள வேண்டும் “












