
தமிழக அரசியல் வானிலையில் மாற்றம் இருக்குமா,?
புயல் வீசுமா,சுனாமி அடிக்குமா ,அனல் காற்று வீசுமா ?
வருகிற 27-ஆம் தேதி காலை 10 மணிக்கு மேல் தெரியவரும். தற்போது பெங்களூரில் நிலை கொண்டிருக்கிற சின்னம்மாவின் நகர்வு சென்னையை வந்தடைந்த பின்னர்தான் தெரிய வரும்.
சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுடன் 4 ஆண்டு கால சிறை தண்டனை நிறைவு பெற்ற நிலையில் விடுதலை ஆகிறார் சசிகலா.
மஞ்சள் குங்குமத்துடன் சிறைக்கு சென்றவர் மங்கல குறியீடுகளை இழந்து திரும்புகிறார்.

இவரது வளர்ச்சிக்கு காரணமாக இருந்தவர் கணவர் நடராசன் .இவர் உடல் நலக்குறைவினால் இறந்து விட்டார். இவரது மறைவுக்காக பரோலில் வந்தவர் 27 ஆம் தேதிக்குப் பின்னர் முழுமையாக சுதந்திரக்காற்றை அனுபவிக்கப்போகிறார்.
ஆனாலும் பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன.
எப்போது பாயும் என்பது பிஜேபியின் சாணக்கியர் அமித்ஷாவிடம் இருக்கிறது. இவருக்கு அரசியலில் இணக்கமாக இருக்கிறவரை சசி மீது கணைகளை ஏவ மாட்டார்.
கர்நாடக உள்துறை அமைச்சகம் விடுதலைக்கான உத்திரவை அளித்து விட்டது.
சசியும் ஐசியூ வை விட்டு வெளியில் வந்து விட்டார்.
கொரானா தொற்று வேகம் குறைந்து விட்டது என்பதாக மருத்துவமனை வட்டாரம் அறிவித்திருக்கிறது.
சசிகலாவின் வழக்குரைஞர் ராஜா செந்தூர பாண்டியன் பேசுகையில் சட்டப்படி விடுதலைக்கான சான்றுகள் தயாராக இருக்கின்றன என்று கூறினார்.
புதன் கிழமை காலையில் சசிகலாவின் கையொப்பம் பெறப்படும் என்கிறார்.
“நல்ல நினைவாற்றலுடன் இருக்கிற அவரால் ,சாதாரணமாக உணவு எடுத்துக்கொள்ள முடிகிறது.” என்கிறது மருத்துவமனை .
ஆனாலும் அவர் பெங்களூருவை விட்டு அமாவாசைக்குப் பின்னர்தான் திரும்புவார் என்கிறது நெருங்கிய வட்டம். அதாவது பிப்ரவரி 4 ஆம் தேதி சென்னை திரும்புவாராம்.
தீவிர அரசியலில் ஈடுபட மாட்டார் ,தேர்தல் முடிகிறவரை எவ்விதமான கருத்துக்களையும் வெளியிடக்கூடாது என்று மத்திய அரசின் உளவுத்துறை அட்வைஸ் பண்ணியிருப்பதாகவும் சொல்கிறார்கள்.
அதாவது அடக்கி வைக்கப்பட்டிருக்கிறார் !!!சர்வேஸ்வரா ,என்னய்யா உனது திருவிளையாடல்.!
1