காதலினால் சாதிகள் போகும்… ஆதலினால் காதல் செய்வீர்! கமலின் ‘காதலர்தின’ வாழ்த்து!!
உலகம் முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 14-ம் தேதி காதலர் தினம் காதலர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது .இந்நிலையில் தமிழ்த்திரையுலகில் கடந்த 80களில் காதல் மன்னனாக வலம் வந்த உலகநாயகன் கமல்ஹாசன் தனது டுவிட்டரில் காதலர் தின வாழ்த்து ஒன்றை பதிவு செய்துள்ளார்.
அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது,”காதலினால் சாதிகள் போகும். காதலினால் சமநிலை ஆகும். காதலினால் பெண்மை உயரும். பெண் உயர்ந்தால் ஆண்மை மிளிரும். மனிதர் உயர்வில் சமூகம் உயரும். ஆதலினால் காதல் செய்வீர் உலகத்தீரே!”என கூறியுள்ளார்.