நடிகர் அஜித் போலீஸ் கமிஷனர் அலுவலகம் சென்றது ஏன்?பரபரப்பு தகவல்கள்!
நேர்கொண்ட பார்வை படத்த்தை தொடர்ந்து நடிகர் அஜித். தற்போது மீண்டும் ஹெச்.வினோத் இயக்கத்தில் தனது 60வது படமான வலிமை படத்தில் நடித்து வருகிறார் அதிரடி ஆக்ஷன் காட்சிகளுடன் உருவாகி வரும் இப்படத்தில் அஜித், ‘ஈஸ்வரமூர்த்தி ஐபிஎஸ்’ என்ற காவல்துறை அதிகாரி வேடத்தில் நடித்து வருகிறார். கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக இப்படத்தின் படப்பிடிப்பு நடந்து வருகிறது. இப்படத்தின் அப்டேட் குறித்த தகவல்கள் இதுவரை எதுவும் வெளியாகாத நிலையில்அதிருப்தியடைந்த ரசிகர்கள் இப்படத்தின் அப்டேட் குறித்து முதல்வர் முதல் பிரதமர் வரை வலிமை படத்தின் அப்டேட் கேட்தவிவரம்பெரும்பரபரப்பைஏற்படுத்தியது.
இந்நிலையில்ரசிகர்களின்இச்செயலை கண்டித்து அஜித்,அறிக்கை ஒன்றை வெளியிட்டார். முன்னரே அறிவித்தபடி படம் குறித்த செய்திகள் உரிய நேரத்தில் வரும். அதற்கான காலத்தை, நேரத்தை நான் தயாரிப்பாளருடன் ஒருங்கிணைந்து நிர்ணயம் செய்வேன். அதுவரை பொறுமையுடன் காத்திருக்கவும். உங்களுக்கு சினிமா ஒரு பொழுதுபோக்கு மட்டுமே. எனக்கு சினிமா ஒரு தொழில்.இதனை மனதில் கொண்டு ரசிகர்கள் பொது வெளியிலும், சமூகவலைதளங்களிலும் கண்ணியத்தையும், கட்டுப்பாட்டையும் கடைபிடிக்க வேண்டும் என்றும்அதில்கூறியிருந்தார்.
இந்நிலையில், நடிகர் அஜித் திடீர் என இன்று காலை வேப்பேரியில் உள்ள சென்னை காவல் ஆணையர் அலுவலகம் சென்றார். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.அஜித்தை பார்த்த ஆச்சரியத்தில் அங்கிருந்த காவலர்கள், பணியாளர்கள் உள்ளிட்ட அனைவருமே அவருடன் போட்டிபோட்டுக்கொண்டு செல்ஃபி எடுத்துக் கொண்டனர் பின்பு அஜித் மீண்டும் அதே காரில் கமிஷனர் அலுவலகத்தை விட்டு புறப்பட்டு சென்றார் .
இது குறித்து விசாரித்த போது,” துப்பாக்கி சுடும் பயிற்சியில் அதிக விருப்பம் கொண்ட அஜித், சென்னை எழும்பூர் காவல் ஆணையரின் பழைய அலுவலகத்தில் இயங்கி வந்த ரைபில் கிளப்பில் உறுப்பினராகவும் உள்ளார். அங்கு செல்வதற்காக கூகுள் மேப்பில் பதிவிட்டு, கால் டாக்ஸியில் வந்துள்ளார். ஆனால், கூகுள் மேப் தவறுதலாகக் காட்டியதால் கால் டாக்ஸி சென்னை காவல் ஆணையரின் புதிய அலுவலகத்துக்கு வந்துவிட்டது தெரியவந்துள்ளது.