“இந்த ஆண்டில் என்னுடைய இரண்டாவது விருப்பமான நாள் இதுதான்.கரண்சிங் குரோவரின் பிறந்தநாள் .ஐ லவ் யூ “என்று பாலிவுட் பிரபல நடிகை பிபாஷா பாஸ் சொல்லியிருக்கிறார்.
யாரிந்த குரோவர்?
மூன்றாவது கணவனாக வாழ்வதற்கு புண்ணியம் பண்ணியிருக்கிற பாலிவுட் நடிகர்.
1996-2002 வரை கணவனாக பணியாற்றியவர் டினோ மோரியா.நடிகர்.
2002-2011 வரை புருஷனாக வாழ்ந்த புண்ணியமூர்த்தி ஜான் ஆபிரகாம், நடிகர்.
2015 -லிருந்து இன்று வரை வீட்டுக்காரர் என வாழ்ந்து கொண்டிருக்கிறார் குரோவர்.
இவர்கள் இருவரும் காதலர் உலகமான மொரிசியஸ் தீவில் இரவுகளை கொண்டாடி வருகிறார்கள்.
காதல் ஜோடிகளின் கனவு உலகமாக மாறி வருகிறது மொரிஷியஸ் .
சுற்றுலாவை வளர்ப்பதற்காக இந்த மாதிரியான சினிமா ஜோடிகளுக்கு சலுகை கட்டணமாம்.!
“கடல் எங்கே ஆகாயத்தை சந்திக்கிறதோ அது நீயும் நானும்தான்”என்று படத்துடன் கவிதை எழுதியிருக்கிறார் பிபாஷா பாஸ்.