அதா சர்மா ஒரு வகையில் தமிழ்ப் பொண்ணு .இவரின் அப்பா ஷர்மா மதுரையை சேர்ந்தவர். வணிக கப்பலில் கேப்டனாக இருந்தவர். அம்மா பாலக்காடு சைடு.
ஆனாலும் தெலுங்கு ,இந்தி படங்களில்தான் அதிகம் நடித்திருக்கிறார்.
அதா சர்மா பாலிவுட் நடிகைகளைப்போலவே துணிச்சலானவர் .கருத்துகளாகட்டும் ,கவர்ச்சியாகட்டும் அம்மணியிடம் தூக்கல்தான்.!
“மனிதர்களை விட மிருகங்களின் மத்தியில் வாழ்வது எனக்கு மிகவும் சவுகரியமானதாக நினைக்கிறேன். சோசியல் இடம் என்று சொல்லப்படும் பார்ட்டிகளை வெறுக்கிறேன். என்னமோ தெரியவில்லை .பார்ட்டிகளில் கலந்து கொள்ளும் மனிதர்களையும் பிடிப்பதில்லை.!
என்னை மிருகங்கள் வாழ்கிற காட்டில் என்னை விட்டுப்பாருங்கள் .வீட்டில் இருக்கிற உணர்வு ஏற்படும். மிருகங்களிடம் சுலபமாக பழகிவிடலாம்.”என்கிறார்.
அப்படியானால் பார்ட்டிகளில் எதோ சிக்கலில் மாட்டியிருந்த தப்பித்து இருக்கிறார். அப்படித்தானே அதா ஷர்மா!