Friday, July 10, 2026
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
Advertisement
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
No Result
View All Result
Cinema Murasam
No Result
View All Result
Home News

நடிகர் விமலின் மனைவிக்கு திமுகவில் சீட்டு கிடைக்குமா? கடன் விவகாரம் கழுத்துக்கு குறி வைத்திருக்கிறது.!

admin by admin
March 5, 2021
in News
424 4
0
593
SHARES
3.3k
VIEWS
Share on FacebookShare on Twitter

 

You might also like

இளம் பெண்களின் கண்ணோட்டங்களை சித்தரிக்க்கும் ‘லவ் ஓ லவ்’! -இயக்குனர் செல்வராகவன்.

‘தி இந்தியா ஸ்டோரி’ படத்தின் புதிய போஸ்டர் வெளியானது!

ஏலகிரி மலைவாழ் மக்களின் வாழ்வியல் கதை!

நடிகர் விமலுக்கு கடன் கொடுத்துவிட்டு அல்லாடிப்போனதாக திருநாவுக்கரசு என்பவர்  புகார் கொடுத்திருக்கிறார்.

அதுவும் விமலின் மனைவி தேர்தலில் போட்டியிடுவதற்கு திமுகவில் விருப்ப மனு தாக்கல் செய்யப்பட்டிருக்கிற நிலையில்.!

இந்த நிலையில் அவரது மனுவை திமுக ஏற்குமா என்பது தெரியவில்லை. இந்த நிலையில்தான் திருநாவுக்கரசு ஒரு விளக்கத்தை பத்திரிகைகளுக்கு அனுப்பி இருக்கிறார். 

அதன் விவரம்:

நடிகர் விமலால் நான் மோசம் செய்யப்பட்டது குறித்து திமுக தலைவருக்கு நான் கடிதம் அனுப்பி அது அனைத்து ஊடகங்களிலும் செய்தியாக வெளிவந்தது. இந்நிலையில் அதனை மறுக்கும் விதமாக நடிகர் விமல் வெளியிட்டுள்ள அறிவிப்பில் என்னுடன் எந்தவித பணபரிவர்தனையிலும் ஈடுபடவில்லை என தெரிவித்துள்ளார். இது எனக்கு மிகுந்த அதிர்ச்சியையும் வேதனையையும் தருகிறது.

2016 ஆம் ஆண்டு ” மன்னர் வகையறா ” படத்தின் படப்பிடிப்பு பட்டுக்கோட்டையில் நடந்த சமயத்தில் தயாரிப்பு பணிகளை தயாரிப்பு மேலாளர் திரு.சேது என்பவரும், விமலின் உதவியாளர் திரு.சாரதி என்பவரும் மேற்கொண்டனர். விமல் கேட்டுகொண்டதற்காக கடனாக அவருக்கு நான் பணம் கொடுத்ததை இருவரும் நன்கு அறிவார்கள். விமலின் வேண்டுகோள்படி சாரதி என்னுடைய திரையரங்கிற்கு வந்து பணம் பெற்று செல்வார். சில சமயங்களில் நான் விமலிடமே நேரடியாக பணத்தை கொடுத்திருக்கிறேன். விமல் மீதிருந்த நம்பிக்கையால் என்னுடைய டைரியில் கையொப்பம் வாங்கி கொண்டு பணத்தை கொடுத்தேன்.

திரு.சாரதி மற்றும் திரு.விமல் இருவருமே என் டைரியில் கையொப்பமிட்டுள்ளார்கள். என்னுடைய டைரியை எந்த விசாரணைக்கும் காட்டுவதற்கு நான் தயாராக இருக்கிறேன். முழு பூசணிக்காயை ஒரு பருக்கை சோற்றில் மறைக்க முயல்வது போல என்னிடம் பணம் வாங்கியதை மறைக்கவும், என்னை ஏமாற்றவும் விமல் முயற்சிக்கிறார். இது ஆரோக்கியமான அணுகுமுறை அல்ல.

விமலுக்கு கடனாக பணம் கொடுத்து இக்கட்டான சூழ்நிலையில் இருந்து அவரை நான் காப்பாற்றினேன். விமல் தங்கியிருந்த பட்டுக்கோட்டை பண்ணை வீட்டில் கதாநாயகியுடன் அடிதடி மோதல் நடந்து அதன் பிறகு கதாநாயகி விமலுடன் நடிக்க முடியாது என்று கூறியதை நான் வெளியில் சொன்னால் விமலுக்கு தான் அசிங்கம்.

பத்தொன்பது நாள் படத்தில் நடித்த கதாநாயகி அந்த சம்பவத்திற்கு பிறகு விமலுடன் நடிக்க முன்வரவில்லை. இதனால் வேறுவழியின்றி 1.8 கோடி செலவு செய்து எடுத்த படத்தை தூக்கி போட்டுவிட்டு, கதாநாயகியாக ” கயல் ” ஆனந்தியை ஒப்பந்தம் செய்து மறுபடியும் அதே காட்சிகளை, அதே வசனத்தோடு எடுத்தனர். இது தான் “மன்னர் வகையறா” படத்தின் பட்ஜெட் எகிறியதற்கு காரணம்

இதையெல்லாம் நான் வெளியில் சொன்னால் விமலின் மானம் கப்பல் ஏறிவிடும் என்பதால் அவரின் நலன் கருதி அமைதி காக்கிறேன். ஆனால் விமல் என் மீது மானநஷ்ட ஈடு வழக்கு தொடருவேன் என்பது காமெடியாக உள்ளது.

2016 ஆம் ஆண்டு அவர் கொடுத்த காசோலை வங்கியில் பணம் இல்லாமல் திரும்பிய போது, என் குடும்பத்தாரும், நண்பர்களும் வழக்கு தொடுக்க சொன்னபோது, நட்பின் காரணமாக நான் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. மாறாக விமலை அணுகி பணத்தை திருப்பித் தரும்படி கேட்டேன். அவரும் பட வெளியீடு சமயத்தில் தன்னை சந்தித்து பணம் பெற்று கொள்ளும்படி கூறினார்.

” மன்னர் வகையறா ” படம் 2018 ஆம் ஆண்டு ஜனவரி 26 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்ட சமயத்தில் அவரை சந்தித்தேன். ஜனவரி 23 ஆம் தேதி ரூ.35 லட்சம் தருவதாகவும், பின்னர் பிப்ரவரி 7 ஆம் தேதி ரூ.45 லட்சம் தருவதாகவும், அதனை நீங்களே என்னுடைய வங்கி கிளைக்கு சென்று RTGS செய்து கொள்ளுங்கள் என்று கூறி காசோலைகளையும், RTGS செய்வதற்கான வங்கி படிவங்களையும் வழங்கினார். ஆனால் 23 ஆம் தேதி நான் வங்கிக்கு சென்ற போது விமல் கணக்கில் பணம் இல்லை என்று கூறி திருப்பி அனுப்பி விட்டனர். விமலை தொடர்பு கொண்ட போது ஒரு வாரம் கழித்து வங்கிக்கு செல்லுங்கள் என்று கூறினார். ஆனால் மறுபடியும் ஏமாற்றம் தான் மிஞ்சியது.

மனம் தளராமல் மறுபடியும் விமலை தொடர்பு கொண்ட போது ” களவாணி -2 ” படப்பிடிப்பில் இருப்பதாகவும், படப்பிடிப்பு முடிந்து சென்னை வந்தவுடன் அழைப்பதாகவும் கூறினார். ஆனால் விமலிடம் இருந்து எந்தவித அழைப்பும் வரவில்லை. இந்த அறிக்கையோடு விமல் பணம் பெறும் போது கையெழுத்திட்ட டைரியின் பக்கத்தையும், RTGS செய்வதற்காக விமல் கொடுத்த ஆவணங்களையும் இணைத்துள்ளேன். எந்த விசாரணைக்கும் டைரியுடன் ஆஜராக நான் தயார். விசாரணையை சந்திக்க விமல் தயாரா?” என அறிக்கையில் கூறப்பட்டிருக்கிறது.

Tags: கடன் விவகாரம்திமுகநடிகர் விமல் .திருநாவுக்கரசு
admin

admin

Related Posts

இளம் பெண்களின் கண்ணோட்டங்களை சித்தரிக்க்கும் ‘லவ் ஓ லவ்’! -இயக்குனர் செல்வராகவன்.
News

இளம் பெண்களின் கண்ணோட்டங்களை சித்தரிக்க்கும் ‘லவ் ஓ லவ்’! -இயக்குனர் செல்வராகவன்.

by admin
July 9, 2026
‘தி இந்தியா ஸ்டோரி’ படத்தின்  புதிய போஸ்டர் வெளியானது!
News

‘தி இந்தியா ஸ்டோரி’ படத்தின் புதிய போஸ்டர் வெளியானது!

by admin
July 9, 2026
ஏலகிரி மலைவாழ் மக்களின் வாழ்வியல் கதை!
News

ஏலகிரி மலைவாழ் மக்களின் வாழ்வியல் கதை!

by admin
July 9, 2026
ஹாரர் காமெடியாக உருவான “இருள் சூழும் இரவினிலே”  !
News

ஹாரர் காமெடியாக உருவான “இருள் சூழும் இரவினிலே”  !

by admin
July 9, 2026
‘டாக்ஸிக்‘ படத்தின் ‘தபாஹி’  மியூசிக் வீடியோ வெளியானது!
News

‘டாக்ஸிக்‘ படத்தின் ‘தபாஹி’ மியூசிக் வீடியோ வெளியானது!

by admin
July 8, 2026

Recent News

‘தி இந்தியா ஸ்டோரி’ படத்தின்  புதிய போஸ்டர் வெளியானது!

‘தி இந்தியா ஸ்டோரி’ படத்தின் புதிய போஸ்டர் வெளியானது!

July 9, 2026
ஏலகிரி மலைவாழ் மக்களின் வாழ்வியல் கதை!

ஏலகிரி மலைவாழ் மக்களின் வாழ்வியல் கதை!

July 9, 2026
ஹாரர் காமெடியாக உருவான “இருள் சூழும் இரவினிலே”  !

ஹாரர் காமெடியாக உருவான “இருள் சூழும் இரவினிலே”  !

July 9, 2026
‘டாக்ஸிக்‘ படத்தின் ‘தபாஹி’  மியூசிக் வீடியோ வெளியானது!

‘டாக்ஸிக்‘ படத்தின் ‘தபாஹி’ மியூசிக் வீடியோ வெளியானது!

July 8, 2026

Actress

Actress Hansika Latest Images

Actress Hansika Latest Images

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty Latest Stills

November 12, 2025
Actress Hansika Latest Images

கவர்ச்சியில் கலக்கும் அமலாபால் !

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty New Photo Shoot

November 12, 2025
Tamannaah Bhatia New Photoshoot

Tamannaah Bhatia New Photoshoot

November 12, 2025

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?