நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்துக்காக இயக்குனர் மணிரத்னம் தயாரித்து வரும் ’நவரசா’ என்ற ஆந்தாலஜி வெப்தொடரை இயக்குனர்கள் ரதீந்திரன், கவுதம் வாசுதேவ் மேனன், கார்த்திக் நரேன், அரவிந்த்சாமி, கார்த்திக் சுப்புராஜ், ஹலிதா ஷமீம், பிஜாய் நம்பியார், கேவி ஆனந்த் மற்றும் பொன்ராம் ஆகிய ஒன்பது இயக்குனர்கள் இயக்கி வருகின்றனர்.
இதில்,சூர்யா, அரவிந்த்சாமி, சித்தார்த், பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட முன்னணி நடிகர்களும் ஐஸ்வர்யா ராஜேஷ், ரேவதி, பூர்ணா, ரித்விகா நித்யா மேனன் உள்பட பலர் நடித்து வருகின்றனர்.
இந்த வெப்தொடர் விரைவில் வெளியாக உள்ள நிலையில், என்ன காரணமோ , தற்போது இத் தொடரிலிருந்து கேவி ஆனந்த் திடீர் என விலகி விட்டதாகவும், அவருக்கு பதிலாக இயக்குனர் வசந்த் புதிய தொடர் ஒன்றை இயக்க இருப்பதாகவும்,இத் தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் ’அருவி’ அதிதி பாலன் நடிக்க உள்ளதாகவும் பரபரப்பான தகவல்கள் வெளியாகியுள்ளது.












