தமிழ் மட்டுமின்றி தெலுங்கிலும் முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை கீர்த்தி சுரேஷ். இந்திப்படம் ஒன்றுக்காக இடையில் உடல் எடையை குறைந்து மெல்லிய தோற்றத்துடன் காணப்பட்டார். வத்தல் உடல் தோற்றம் அவருக்கு காய் கொடுக்க வில்லை’ ரசிகர்களும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.பட வாய்ப்புகளும் குறைய தொடங்கின.
இதையடுத்து கீர்த்தி சுரேஷ் மீண்டும் தனது உடல் எடையை கூட்டி பழைய தோற்றத்திற்கு மாறியுள்ளார். சமீபத்தில் இசையமைப்பாளர் அனிருத்துடன் கீர்த்தி சுரேஷ் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி, இருவருக்கும் காதல் என்ற தகவலும் வைரலானது. இந்நிலையில் நடிகை கீர்த்தி சுரேஷுக்கு தொழில் அதிபர் ஒருவருடன் திருமணம் என தகவல் பரவி வருகிறது.
இதுகுறித்து கீர்த்தி சுரேஷ் கூறியுள்ளதாவது, “எனக்கு தொழில் அதிபருடன் திருமணம் என்ற தகவலை கேட்டு நானே ஆச்சரியப்பட்டேன்.எங்கிருந்து இந்த தகவல் பரப்பப் பட்டது என தெரிய வில்லை.. எனக்கு அந்தமாதிரி எந்த திட்டமும் இல்லை. இப்போது திருமணம் செய்துகொள்ள நேரமும் இல்லை. எனது சொந்த வாழ்க்கை பற்றி வதந்தி பரப்பாமல் ஏதாவது நல்ல விஷயங்களில் அவர்கள் கவனம் செலுத்த வேண்டும் என்கிறார் ஆவேசமாக..