கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் தமிழ் தெலுங்கு திரை உலகைச் சேர்ந்த பிரபல இயக்குனர்கள், நடிகர்கள், தயாரிப்பாளர்கள் மீது கவர்ச்சிநடிகை ஸ்ரீரெட்டி கூறிய பாலியல் குற்றச்சாட்டு பலரையும் அதிர வைத்தது.
இந்நிலையில் இயக்குனர் பாலாவிடம் உதவி இயக்குனராக இருந்த ராஜங்கம் என்பவர் தற்போது ’ஸ்ரீரெட்டி டைரி’ என்ற பெயரில் அவருடைய வாழ்க்கை வரலாறு திரைப்படத்தை இயக்கி வருகிறார்.
இப் படத்தில் ஸ்ரீரெட்டிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பிரபலங்கள் வெளிச்சம் போட்டு காட்டப்படுவார்கள் என்று கூறப்படுகிறது.கிட்டத்தட்ட இறுதி கட்ட படப்பிடிப்பிலிருக்கும் இப்படத்தை வெளியிடக் கூடாது என போனில் மிரட்டல் வந்துள்ளதாகவும், இது குறித்து போலீசில் புகார் அளிக்க முடிவு செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.