கமல்,ஷங்கர் கூட்டணியில் 1996ஆம் ஆண்டு வெளியான இந்தியன் படத்துக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து, மீண்டும் கமல்- ஷங்கர் கூட்டணி இந்தியன்-2 படத்துக்காக இணைந்தது.இதில் கமலுடன்,காஜல் அகர்வால், பிரியா பவானிசங்கர், ராகுல்ப்ரீத் சிங்,பாயி சுசி,ஐஸ்வர்யாராஜேஷ்,சித்தார்த், ஆர்ஜே.பாலாஜி,நெடுமுடிவேணு ,சமுத்திரக்கனி,மார்க் பென்னி,ஜோன் லம்பர்ட்,ஐசரி கணேஷ்,ஆடுகளம் நரேன், உள்ளிட்ட பெரிய நட்சத்திர பட்டாளமே திரண்டு நடித்து வருகின்றனர்.
பல்வேறு இடங்களில் விறுவிறுப்பாக நடந்து வந்த இப்படத்தின் முக்கிய காட்சியின் படப்பிடிப்புக்காக கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் சென்னை ஈவிபி பிலிம் சிட்டியில் பிரமாண்ட செட் அமைக்கப்பட்டு படப்பிடிப்பு நடத்தப்பட்டது.அப்போது எதிர்பாராத விதமாக ராட்சத கிரேன் சரிந்து விழுந்து பெரும் விபத்து ஏற்பட்டது. இவ்விபத்தில் 3 பேர் பலியாகினர்.இதையடுத்து படப்பிடிப்பு நிறத்தப்பட்டது.
தொடர்ந்து கொரோனா லாக்டவுன் காரணமாக படப்பிடிப்பை மீண்டும் தொடங்க முடியாத நிலை உருவானது. தற்போது லாக் டவுன் தளர்வுகள்அறிவிக்கப்பட்டுவிட்டாலும், கமல் பிக்பாஸ்,மற்றும் அரசியல் என அடுத்தடுத்து களமிறங்கியதால் இந்தியன்-2 படப்பிடிப்பு தொடங்குவது கேள்விக்குறியானது. இதற்கிடையே கமல் , லோகேஷ் கனகராஜின் இயக்கத்தில் விக்ரம் என்ற படத்தை தொடங்குவதாகவும் அறிவித்தார்.
தேர்தலுக்கு பின் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்க உள்ளது.இயக்குனர் ஷங்கரும் புதிய படமொன்றை இயக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியானது.இந்நிலையில்,இந்தியன்-2 படத்தின் கதாநாயகி காஜல் அகர்வால். ஐதராபாத்தில் செய்தியாளர்களை சந்தித்த போது,அவரிடம் இந்தியன் 2 படத்தின் தற்போதைய நிலை குறித்து கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதிலளித்து காஜல் அகர்வால் கூறுகையில்,”இந்தியன் 2 படத்தில் பணிபுரியும் பெரும்பாலான டெக்னிஷியன்கள் அமெரிக்காவைச் சேர்ந்தவர்கள் என்பதால் கொரோனா கட்டுப்பாடுகளால் அவர்களால் இந்தியாவுக்கு வர முடியவில்லை.இது தான் இந்தியன் 2 படத்தின் தற்போதைய நிலை. கட்டுப்பாடுகள் எப்போது விலகினாலும் உடனடியாக படப்பிடிப்பு தொடங்கப்பட்டு விடும்.இது தான் இந்தியன்-2 படப்பிடிப்பு தாமதமாக உண்மையான காரணம் என்று கூறியுள்ளார்.












