50 வயதிலும் இளம் ‘பிகினி’ அழகிகளுக்கு சவால் விடும் பத்மா லட்சுமி!
சர்வதேச புகழ் பெற்ற பத்மா லட்சுமி சென்னையில் பிறந்தவர். சகலகலாவல்லி. நடிகை, மாடல், டி.வி. நிகழ்ச்சி தொகுப்பாளர், சமையல் கலை நிபுணர் என பன்முகம் கொண்டவர்.அமெரிக்க தொலைக்காட்சியில் ‘டாப் ஷெப்’ எனும் நிகழ்ச்சி பத்மா லட்சுமியை பிரபலமாக்கியது. பத்மா லட்சுமிக்கு நிறைய காதலர்கள் உண்டு. பிரபல எழுத்தாளர் சல்மான் ருஷ்டியை 2004-ம் ஆண்டு காதலித்து மணந்தார். 2007-ம் ஆண்டு கருத்து வேறுபாட்டால் இருவரும் பிரிந்து விட்டனர்.பின்னர் தொழில் அதிபர் ஆடம் டெல்லுடன் நெருங்கிப் பழகி வந்தார். அதே காலகட்டத்தில் கோடீஸ்வர் போர்ஸ்ட்மேன் என்பவருடனும் தொடர்பில் இருந்தார். அவருக்கும், பத்மாவுக்கும் 30 வயது வித்தியாசம். அதனால் அவருடைய சொத்துக்கு ஆசைப்பட்டுதான் அவரை காதலிப்பதாக பத்மா மீது விமர்சனங்கள் பாய்ந்தன. அவற்றை பத்மா மறுத்து வந்தார்.
2009-ம் ஆண்டு பத்மா லட்சுமிக்கு பெண் குழந்தை பிறந்தது. அக்குழந்தைக்கு கிருஷ்ணா என்று பெயரிட்டார். பின்பு அவரோடு சேர்ந்து வாழ்ந்த போர்ஸ்ட்மேன், புற்றுநோய் பாதிப்புக்குள்ளாகி இறந்து போனார். அவர் இறப்பதற்கு முன்பாக பத்மாவின் குழந்தை கிருஷ்ணாவுக்கு தனது சொத்துக்களை எழுதி கொடுத்தார்.
பின்பு ஆடம்டெல்- பத்மா லட்சுமி உறவில் விரிசல் ஏற்பட்டது. தற்போது மகளின் (கிருஷ்ணா) முன்னேற்றமே தனது லட்சியம் எனக்கருதி அவளுக்காக வாழ்ந்து வருவதக்க கூறும் பத்மா லட்சுமிக்கு தற்போது வயது 50 . இந்நிலையில் தனது சமூக வலைதளத்தில் ஒரு மில்லியன் ஃபாலோயர்களை வைத்திருக்கும் பத்மா லட்சுமி அவ்வப்போது அதில் தனது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இந்நிலையில், தனது 50-வது வயதில் ‘டூ பீஸ்’ பிகினி புகைப்படம் ஒன்றை வெளியிட்டு அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளார்.
பத்மாலட்சுமி தனது ஐம்பதாவது வயதிலும் ‘டீன் ஏஜ்’ அழகிகளுக்கு சவால் விடும் வகையில் பிகினி புகைப்படத்தை வெளியிட்டு உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது