இயக்குனர் விக்னேஷ் சிவன், நயன்தாரா ஜோடி, (கடந்த 5 ஆண்டுகளுக்கு மேலாக) ‘நானும் ரவுடிதான்’ படத்தில் ஆரம்பித்த இவர்களின் காதல் கல்யாணத்தில் முடியுமா,அல்லது காதலாகவே தொடருமா? என்பது சிந்துபாத் கதை போல் நீண்டு கொண்டே போகிறது. இந்நிலையில் அவ்வப்போது நயனின் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் மற்றும் ட்விட்டர் பக்கங்களில் வெளியிட்டு வரும் விக்னேஷ் சிவன்,தற்போது, நயனின் ரொமான்ஸ் புகைப்படம் ஒன்றை பதிவு செய்துள்ளார். விக்னேஷ் சிவனை ஆரத்தழுவி அவரின் மார்பு மீது நயன்தாரா தனது கையை வைத்து இருப்பது போன்ற புகைப்படத்தில் ’விரலோடு உயிர் கூட கோர்த்து’ என்ற கவிதை வரிகளையும் சேர்த்து பதிவு செய்துள்ளார் விக்னேஷ் சிவன்.இந்நிலையில் விக்னேஷ் சிவன் நயன்தாரா இருவருக்கும் அவர்களது பெற்றோர்கள் முன்னிலையில் திருமண நிச்சயதார்த்தம் நடந்ததாகவும் அப்போது நயனுக்கு விக்கி மோதிரம் அணிவித்ததாகவும், காத்து வாக்குல ரெண்டு காதல் படம் முடியிறதுக்குள்ள இவர்களது திருமணத் தேதி அறிவிக்கப்பட்டாலும் ஆச்சரியமில்லை என்கிறது விக்கியின் தரப்பு. நயனின் தரப்போ நமட்டு சிரிப்புடன்,’உலகம் எங்கேயோ போய்கிட்டு இருக்கு. இன்னும் எத்தனை தடவை தான் அவங்களுக்கு நிச்சயதார்த்தம், கல்யாணம்னு சொல்லிக்கிட்டு இருப்பீங்க.அதையெல்லாம் அவங்க தாண்டி போயி வருஷக்கணக்காயிடுச்சு. இது வழக்கமான ரொமான்ஸ் புகைப்படம் மட்டும் தான். போயி வேற வேலையை பாருங்க என்கிறது.