நடிகர் செந்திலுக்கு கொரோனா !
நகைச்சுவை நடிகர் செந்தில். (வயது 68). தற்போது சுரேஷ் சங்கையா இயக்கத்தில் இன்னும் பெயரிடப்படாத படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார்.இந்நிலையில் அ.தி.மு.கவில் இருந்து விலகி தினகரனின் அ.ம.மு.க. கட்சியில் இருந்து வந்த செந்தில் சமீபத்தில் அங்கிருந்தும் விலகி பா.ஜனதாவில் இணைந்து அதிமுக பாஜக கூட்டணிக்கு ஆதரவாக தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார்.
இந்நிலையில் நடிகர் செந்திலும் அவரது மனைவி கலைச்செல்வியும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு காட்டாங்கொளத்தூரில் உள்ள எஸ்.ஆர்.எம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.கடந்த 5 நாட்களாக சிகிச்சை பெற்றுவரும் இருவரும் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டு வருவதாகவும் இன்னும் ஓரிரு நாட்களில் வீடு திரும்புவார்கள் என்றும் அவருக்கு நெருக்கமானவர்கள் தெரிவித்தனர்.இந்நிலையில் செந்திலின் மகனும் மருமகளும் கொரோனா தொற்றுக்கு ஆளாகி அவர்களும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.