‘ சுயமரியாதையை நிலை நாட்ட தமிழர்கள் தயங்க மாட்டார்கள்’ -வி.செ.குகநாதன் கண்டனம்.

தந்தை பெரியாரின் பெயரை ரகசியமாக அகற்றிவிட்டு வேறு பெயரை அறிவித்து இருக்கிறது  அதிமுக அரசு. 

தேர்தலுக்கு முன்னரே செய்யத்தவறிய முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு  தற்போது கடுமையான கண்டனங்கள் வந்து கொண்டிருக்கின்றன.

இதற்கு தமிழ்த்திரையுலகில் இருந்து முதல் கணையாக எய்திருக்கிறார் இயக்குநர் வி.செ .குகநாதன்.

அவரது அறிக்கையின் விவரம்.:

“பெரியார் பெயரை பெயர் பலகைகளில் இருந்து நீக்குவது உங்கள் அதிகாரம் என்றால்…
உங்களின் அந்த அதிகாரத்தை ஜனநாயக ரீதியாக பறித்து, தன் பாரம்பரியப் பெருமையை நிலைநாட்ட  தமிழர்கள் தயங்கவே மாட்டார்கள்.
பலகோடி தமிழர்களின் இதயத்திலே சுயமரியாதை தீபம் ஏற்றி வைத்த பகுத்தறிவு பகலவன் தனி மனிதரல்ல. அவர் திராவிடத் தமிழர்களின் எழுச்சி வடிவம்.
தேசப்பிதா மகாத்மா என்றால், தமிழகத்தின் தந்தை பெரியார் ஆவார்.
அவர் அண்ணாவின் தலைவர்.
கலைஞரின் தலைவர்.
எம்.ஜி.ஆரின் தலைவர்.
ஜெயலலிதாவின் தலைவர்.
தளபதி ஸ்டாலினின் தலைவர்.
ஒட்டுமொத்த தமிழினத்தின் ஒப்பற்ற தலைவர்.
தமிழகம் இந்தியாவுக்கு வழிகாட்ட வேண்டுமே தவிர, விழிபிதுங்க வைக்கக்கூடாது.
பெரியாரில் மீண்டும் மீண்டும் கை வைப்பது
உறவுகளை சிதைத்துவிடும்.
உணர்வுகளை கொன்றுவிடும்.”என சொல்லியிருக்கிறார்.குகநாதன்.