
கன்னடம் மற்றும்தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹேக் டே.
தமிழில் நெல்சன் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் அவருடைய 65. வது படத்தில் பூஜா கதாநாயகியாக நடித்து வருகிறார்.
இவர் ஏற்கனவே தமிழில் வெளியான முகமூடி படத்தில் ஜீவாவுக்கு ஜோடியாக நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால்,தொடர்ந்து பட வாய்ப்புகள் எதுவும் அமையாததால் தெலுங்கு பக்கம் கிளாமராக சென்றார். இம்முறை அவருக்கு பட வாய்ப்புகள் குவிந்து வருகிறதாம்.
சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிக்கவிருக்கும் கிராமத்து கதைக்களம் கொண்ட படத்தில் அவருக்கு ஜோடியாக பூஜா ஹேக்டே நடிக்க பேச்சு வார்த்தை நடத்த்து வருவதாகவும் இப்படங்களை வெளியாவதற்கு முன்பே மேலும் சில முன்னணி நடிகர்களின் படங்களில் நான் இருப்பேன் இம்முறை எனது கணக்கு தப்பாது என்கிறாராம் பூஜா ஹெக்டே.!
நீங்க போட்ட கணக்கு எந்த காலத்தில்தான் தவறியிருக்கிறது? சரோஜாதேவி காலத்தில் இருந்து கணக்கு போட்டபடிதானே இருக்கிறீர்கள்?












