நடிகர் ரஜினிகாந்த் இன்று சென்னை திரும்பினார்! மு.க.ஸ்டாலினை சந்திக்கிறார்!!

சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்து வரும் அண்ணாத்த படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு தற்போது கொரோன கால நெருக்கடியிலும் ஐதராபாத்தில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

இதில் இரவு பகலாக ரஜினிகாந்த் நடித்து வருகிறார்.இந்தப் படத்தில் நடிகைகள் குஷ்பு, மீனா, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ் ,ஜெகபதி பாபு, சதீஷ், சூரி, வேல் ராமமூர்த்தி உள்ளிட்ட பலரும்  நடித்து வருகின்றனர்.

இந்நிலையில், ரஜினிகாந்த்  சம்பந்தப்பட்ட காட்சிகள் அனைத்து நேற்று இரவு முடிவடைந்தது ,இதையடுத்து ரஜினிகாந்த்  இன்று காலை ஐதராபாத்திலிருந்து விமானம் மூலம் இன்று காலை 11.45 மணியளவில் சென்னை திரும்பினார். இதையடுத்து தமிழக முதல்வராக பதவியேற்றுள்ள திமுக தலைவர் முக ஸ்டாலினை நேரில்  சந்தித்து வாழ்த்துக்கள் தெரிவிக்க உள்ளதாக கூறப்படுகிறது.