விஜய்யின் மாஸ்டர் படத்தை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகும் விக்ரம் பட த்தை இயக்கவுள்ளார். இதில் கமலுக்கு கமலுக்கு வில்லனாக நடிக்க விஜய்சேதுபதியிடம் முதலில் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டு வந்த நிலையில், இது குறித்து விஜய்சேதுபதி கூறுகையில் ,“விக்ரம் படத்துக்காக இயக்குனர் தரப்பில் என்னை அணுகியது உண்மைதான். அது வில்லன் கதாபாத்திரம். ஆனால் தேதிகள் ஒதுக்கப்படவில்லை. விக்ரம் படத்தில் நான் வில்லனாக நடிப்பதற்கு ஏதேனும் சிறப்பான விஷயங்கள் இருக்க வேண்டும். இல்லையென்றால் அதை செய்வதில் அர்த்தம் இல்லை” என்றே கூறியிருந்தார்.
இந்நிலையில் விக்ரம் படத்தில் கமலுக்கு வில்லனாக மலையாள நடிகர் பகத் பாசில் நடிக்க உள்ளதாகவும், பாலிவுட் நடிகர் ஒருவரும் நடிக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி வந்தன. இதனால் கமலுக்கு யார் வில்லன் என்பதில் குழப்பம் நிலவி வந்தது.இந்நிலையில் தற்போது கமலுக்கு வில்லனாக விஜய்சேதுபதி நடிப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளதாகவும், கொரோனா ஊரடங்கு முடிந்ததும் படப்பிடிப்பை தொடங்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது . இவருடன் மலையாள நடிகர் பகத் பாசிலும் முக்கிய கதாபாத்திரத்தை ஏற்றுள்ளதாகவும் கூறப்படுகிறது ஆனால் இது குறித்து படத்தரப்பில் அதிகாரபூர்வ தகவல்கள் எதுவும் வெளியாக வில்லை என்பது குறிப்பிடத்தக்கது.