முடிவுக்கு வந்த நயன்தாராவின் ‘ஊசி’ விவகாரம்!
தமிழகம் முழுவதும் மிக தீவிரமாக பரவி வரும் கொரோனா தொற்று குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சினிமா பிரபலங்கள் பலரும் தடுப்பூசி போட்டு கொண்டு சமூக வலைதளங்களில் அதன் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர்.
இந்நிலையில், நடிகை நயன்தாரா மற்றும் அவரது காதலர் விக்னேஷ் சிவன் ஆகியோர் தடுப்பூசி போட்டுக்கொள்ளும் புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டனர் . வைரலான நயன்தாராவின் புகைப்படத்தில் மட்டும் ஊசி சிறிதும் தென்படவில்லை. இதனைப்பார்த்த நெட்டிசன்கள் பலரும், எங்கே ஊசியை காணோம்? எல்லாம் பொய்யா?
எதற்கு இந்த நடிப்பு நயன்தாரா? தடுப்பூசி வலது கையில் போட மாட்டார்கள்… ஆனால் இது எப்படி? என்ன ஊசிய காணல. எல்லாம் நடிப்பா கோபால்? சும்மா ஒரு டம்மி ஊசியையாச்சும் வச்சிருந்திருக்கலாம்…!சினிமா படப்பிடிப்புனு நினைச்சிட்டாங்க போல…!
என அடுக்கடுக்கான கேள்விகளால் துளைத்தெடுத்து வருகின்றனர்.
மொத்தத்தில் மீண்டும் நயன்தாரா போட்ட தடுப்பூசியால் சர்ச்சையில் சிக்கியுள்ளார். இந்நிலையில், நடிகை நயன்தாரா தரப்பில் புதிய புகைப்படம் ஓன்று வெளியிடப்பட்டுள்ளது.
அதில் நயனதாரா தடுப்பூசி போட்டுக்கொண்ட, மற்றொரு கோணத்தில் எடுக்கப்பட்டுள்ள அந்த புகைப்படத்தில், நர்ஸ் கையில் ஊசி இருப்பது சற்று தெளிவாக தெரிவதால் நயனின் தடுப்பு ஊசி விவகாரம் சர்ச்சை முடிவுக்கு வந்துள்ளது.