ரசிகர்களிடம் ‘பிறந்தநாள்’ பரிசு கேட்ட நடிகர் கார்த்தி !

நடிகர் கார்த்தி இன்றுதனது 44வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு திரையுலகினர் பலரும் இணையதளம் மற்றும் தொலைபேசி மற்றும் செல்போன் வாயிலாக வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.இந்நிலையில் அவர் தன் ரசிகர்களிடம் தனக்கு பிறந்தநாள் பரிசு ஒன்றை கேட்டு கடிதம் எழுதியுள்ளார்.
அதில்,”அன்புத் தம்பிகள் அனைவருக்கும் வணக்கம்!இந்த கொரோனா சூழல் இதுவரை நாம் கண்டிராத அளவுக்கு மிகக் கடுமையாக உள்ளது! அரசாங்கமும், மருத்துவர்களும் நமக்கு அறிவித்துள்ள, ‘மாஸ்க் அணிதல், சானிடைசர் பயன்படுத்தல், தனி மனித இடைவெளியைக் கடைபிடித்தல், வசிப்பிடத்தை விட்டு வெளியே செல்லாமல் இருத்தல் போன்ற பாதுகாப்பு விதிமுறைகளை தவறாமல் பின்பற்றி; தம்பிகள் ஒவ்வொருவரும் உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும்’. இதுவே இந்தப் பிறந்தநாளுக்கு எனக்கு நீங்கள் தரும் பரிசாக இருக்கும்! இவ்வாறு அவர் எழுதியுள்ளார்.