நடிகர் விஜய் மகன் ‘லாக் டவுனில்’ இரவில் காரில் ஊர் சுற்றினாரா? வைரலாகும் வீடியோ!


நடிகர் விஜய்யின் மகன் ஜேசன்  சஞ்சய் விஜய்  லண்டனில் பிறந்தவர். இங்கிலாந்து நாட்டு குடிமகன். . கனடாவில் திரைப்பட கல்லூரியில் படித்துள்ளார்.ஜேசன் சஞ்சய் குறும்படங்களை இயக்கி, நடித்திருக்கிறார். அந்த குறும்படங்கள் விஜய் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்புக்குள்ளானது. வெளிநாட்டில் திரைப்பட படிப்பை முடித்துள்ள ஜேசன் ,அப்பா விஜய் மாதிரி நடிகரும் ஆகலாம் .தாத்தா எஸ்.ஏ. சந்திரசேகர் போன்று இயக்குநரும் ஆகலாம்.ஜேசன் ஹீரோவாகப் போகிறாராஅல்லது இயக்குநராகப் போகிறாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

மகனின் விஷயத்தில்,நடிகர் விஜயும், ஜேசனை வற்புறுத்தவில்லை. ஜேசனுக்கு எது விருப்பமோ அதையே செய்யட்டும் என்று விட்டுவிட்டார் என்கிறார்கள். இந்நிலையில் ஜேசன் சஞ்சய் வெளியிட்டுள்ள அவரது வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.சென்னையில்,இரவில் எடுக்கப்பட்டுள்ள அந்த வீடியோவில் ஜேசன் சஞ்சய் காரில் பாட்டுக்கேட்ட படி சென்று கொண்டிருப்பது தெரிகிறது. இது லாக் டவுனில் எடுக்கப்பட்டதா? அல்லது அதற்கு முன்பா என்பது தெரியவில்லை .

ஜேசன் சஞ்சய் கனடாவில் இருந்தபோது அவரை விஜய் சேதுபதி கோலிவுட்டில் உப்பேனா தெலுங்கு படத்தின் தமிழ் ரீமேக்கில் ஹீரோவாக அறிமுகம் செய்து வைக்கப் போகிறார் என்று செய்திகள் வெளியானது. ஆனால்,ஜேசன் சஞ்சய் உப்பேனா தமிழ் ரீமேக்கில் நடிக்கவில்லை. அவர் தற்போது படிப்பில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறார் என்று விஜய் தரப்பில் தெரிவிக்கப்பட்டதுகுறிப்பிடத்தக்கது.