தமிழகத்தில் தளர்வுகளுடன் மேலும் ஒரு வாரத்திற்கு ஊரடங்கு நீட்டிப்பு! (முழுவிபரம்)

தமிழகத்தில் கொரோனா பரவல் சற்று குறைந்து வரும் நிலையில் தளர்வுகளுடன் மேலும் ஒரு வாரத்திற்கு (ஜூன் 14 வரை)ஊரடங்கு நீட்டிக்க பட்டுள்ளதாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
இது குறித்து தமிழக முதல்வர் முக. ஸ்டாலின் விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது, ,”கொரோனா வைரஸ் நோய் தொற்று வராமல் தடுப்பதற்காக இந்திய அரசின் வழிகாட்டுதலின்படி தமிழ்நாட்டில் 25. 3 .2020 முதல் தேசிய பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் ஊரடங்கு உத்தரவு குறிப்பிட்ட சில தளர்வுகள் அமலில் இருந்து வருகிறது. இந்திய அரசின் உள்துறை அமைச்சகத்தால் 27 .5. 2021 அன்று வெளியிடப்பட்டுள்ள ஆணையில், கொரோனா நோய்த்தடுப்பு நடவடிக்கைகள் 30.6. 2021 வரை தொடர்ந்து அமலில் இருக்கும் என ஆணையிடப்பட்டுள்ளது. மேலும் நோய் தொற்று பரவலை தடுக்கும் பொருட்டு அனைத்து கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள், மருத்துவ வல்லுநர்கள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடன் நடத்தப்பட்ட ஆலோசனையின் போது தெரிவிக்கப்பட்ட கருத்துக்களின் அடிப்படையில், தொற்று நோய் பரவலை கட்டுப்படுத்த கடந்த 24. 5 .2021 முதல் தளர்வுகள் அற்ற முழு ஊரடங்கு தமிழ்நாட்டில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. இந்த ஊரடங்கு வரும் 7.6. 2021 அன்று காலை 6 மணிக்கு முடிவுக்கு வரும். இந் நிலையில் நோய்த்தொற்றின் தன்மையினை மாவட்ட வாரியாக ஆய்வு செய்தும், நோய்த்தொற்று பரவாமல் தடுத்து மக்களின் விலைமதிப்பற்ற உயிர்களைக் காக்கும் நோக்கிலும், இந்த முழு ஊரடங்கு 7.6 .2021 முதல் 14. 6. 2021 காலை 6 மணி வரை சில தளர்வுகள் உடன் மேலும் ஒரு காலத்திற்கு நீட்டிப்பு செய்து உத்தரவிட்டுள்ளேன். இந்த ஊரடங்கின் போது மேலும் அனைத்து மாவட்டங்களிலும் ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட செயல்பாடுகள் தொடர்ந்து அனுமதிக்கப்படும். தமிழ்நாட்டில் தற்போது கொரோனா நோய் தொற்று பரவலாக பல மாவட்டங்களில் கட்டுக்குள் வந்துள்ள போதிலும், கோயம்புத்தூர், நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், கரூர், நாமக்கல், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் மற்றும் நோய்த் தொற்று பரவல் தொடர்ந்து அதிகமாகவே இருந்து வருகிறது. எனவே இம்மாவட்டங்களில் நோய்த்தொற்று பரவலை கட்டுக்குள் கொண்டுவரும் வகையிலும், அதேசமயம் பொதுமக்களின் அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்யும் நோக்கத்துடன், தற்போது ஏற்கனவே அனுமதிக்கப்பட்டுள்ள தளர்வுகளுடன் மேற்காணும் 11 மாவட்டங்களில் கீழ்க்கண்ட அத்தியாவசிய செயல்பாடுகளுக்கு மட்டும் கட்டுப்பாடுகளுடன் 7.6 .2021 முதல் அனுமதி அளிக்கப்படுகிறது.

தனியாக செயல்படுகின்ற மளிகை பலசரக்குகள் காய்கறிகள் இறைச்சி மற்றும் மீன் விற்பனை செய்யும் கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்.

காய்கறி, பழம் மற்றும் பூ விற்பனை செய்யும் நடைபாதைக் கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்.
மீன் சந்தைகள் மொத்த விற்பனைக்காக மட்டும் செயல்பட அனுமதிக்கப்படும் .
மீன் சந்தைகளில் சமூக இடைவெளியை கடைபிடிக்கும் பொருட்டு ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் திறந்த வெளியில் இந்த சந்தைகளை அமைப்பதற்கான மாற்று ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகங்கள் உடனடியாக செய்ய வேண்டும்.
இறைச்சி கூடங்கள் மொத்த விற்பனைக்கு மட்டும் அனுமதிக்கப்படும். அனைத்து அரசு அலுவலகங்களும் 30 சதவிகிதம் பணியாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படும்.

சார்பதிவாளர் அலுவலகங்கள் ஒருநாளைக்கு 50 சதவீதம் டோக்கன்கள் மட்டும் வழங்கப்பட்டு பத்திரப் பதிவுகள் மேற்கொள்ள அனுமதிக்கப்படும.

தீப்பெட்டி தொழிற்சாலைகள் 50 சதவிகிதம் பணியாளர்களுடன் நிலையான வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்றி செயல்பட அனுமதிக்கப்படும்.

மேலே குறிப்பிட்ட 11 மாவட்டங்களை தவிர இதர மாவட்டங்களில் நோய்த்தொற்று குறைந்து வருவதை கருத்தில் கொண்டு ஏற்கனவே அனுமதிக்கப்பட்டுள்ள அளவுகளுடன் கூடுதலாக கீழ்கண்ட செயல்பாடுகளும் அனுமதிக்கப்படும்.

தனியாக செயல்படுகின்ற மளிகை பலசரக்குகள், காய்கறிகள் இறைச்சி மற்றும் மீன் விற்பனை செய்யும் கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்.

காய்கறி பழம் மற்றும் பூ விற்பனை செய்யும் நடைபாதை கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும் மீன் சந்தைகள் மொத்த விற்பனைக்காக மட்டும் செயல்பட அனுமதிக்கப்படும்.

மீன் சந்தைகளில் சமூக இடைவெளியை கடைப்பிடிக்கும் பொருட்டு ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் திறந்த வெளியில் இந்த சந்தைகளை அமைப்பதற்கான மாற்று ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகங்கள் உடனடியாக செய்யவேண்டும்.
இறைச்சி கூடங்கள் மொத்த விற்பனைக்கு மட்டும் அனுமதிக்கப்படும் தீப்பெட்டித் தொழிற்சாலைகள் 50 சதவிகிதம் பணியாளர்களுடன் நிலையான வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்றி செயல்பட அனுமதிக்கப்படும்.

அனைத்து அரசு அலுவலகங்களும் 30% பணியாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படும் சார்பதிவாளர் அலுவலகங்கள் ஒருநாளைக்கு 50 சதவிகிதம் டோக்கன்கள் மட்டும் வழங்கப்பட்டு பத்திரப் பதிவுகள் மேற்கொள்ளப்படும்.

தனியார் பாதுகாப்பு சேவை நிறுவனங்கள் மற்றும் அலுவலகம் வீடுகள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகளில் வீடு பராமரிப்பு உள்ளிட்ட சேவைகளை பதிவுடன் அனுமதிக்கப்படும்.
மின் பணியாளர், பிளம்பர், கணினி மற்றும் இயந்திரங்கள் பழுது நீக்குபவர் மற்றும் தச்சர் போன்ற சுயதொழில் செய்பவர்கள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை பணிபுரிய அனுமதிக்கப்படுவர்.

மின்பொருள்கள், பல்புகள், கேபிள்கள், சுவிட்சுகள் மற்றும் ஒயர்கள் விற்பனை செய்யும் கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும் .

மிதிவண்டி மற்றும் இரு சக்கர வாகனங்கள் பழுது நீக்கும் கடைகள் மட்டும் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்.

ஹார்ட்வேர் கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும். கல்வி புத்தகங்கள் மற்றும் எழுது பொருள்கள் விற்பனை செய்யும் கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்.

வினியோகம் வாகன பழுதுபார்க்கும் மையங்கள் மட்டும் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும் வாடகை வாகனங்கள் மற்றும் ஆட்டோக்களில் பயணிகள் செல்ல அனுமதிக்கப்படும்.
மேலும் வாடகை காட்சிகளில் ஓட்டுனர் தவிர 3 பயணிகளும் ஆட்டோக்களில் ஓட்டுநர் தவிர இரண்டு பயணிகள் மட்டும் பயணிக்க அனுமதிக்கப்படும்.

பொதுமக்கள் தங்களது வீடுகளுக்கு அருகில் உள்ள கடைகளுக்கு நடந்து சென்று பொருட்கள் வாங்கும் மாறும் இரண்டு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களை கடைகளுக்கு செல்வதை தவிர்க்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
நோய்த்தொற்றை கட்டுப்படுத்த பொதுமக்களின் நலன் கருதி தமிழ்நாட்டில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் பொதுமக்கள் அவசியமின்றி வீட்டில் இருந்து வெளியில் வருவதையும் கூட்டங்களையும் தவிர்க்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
மேலும் கொரோனா மேலாண்மைக்கான தேசிய வழிகாட்டு நடைமுறைகளில் குறிப்பிட்டுள்ளபடி பொது இடங்களில் முகக் கவசம் அணிவது சமூக இடைவெளியை கடைபிடிப்பது கைகளை அடிக்கடி சோப்பு மற்றும் கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்வது ஆகியவற்றை கட்டாயம் பின்பற்றவும், நோய்த்தொற்று அறிகுறிகள் தென்பட்டவுடன் பொதுமக்கள் உடனே அருகில் உள்ள மருத்துவமனைகளை நாடி மருத்துவ ஆலோசனை மற்றும் சிகிச்சை பெறவும் கேட்டுக்கொள்கிறேன்.
மக்கள் அனைவரும் அரசின் முயற்சிகளுக்கு முழு ஒத்துழைப்பு நல்க வேண்டும் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்