இந்திய திரையுலகிலேயே அடிக்கடி சர்ச்சையில் சிக்கிக் கொள்ளும் இயக்குனர் என பெயரெடுத்துள்ள ராம் கோபால் வர்மா. கொரோனாவால் திரையுலகமே ஸ்தம்பித்து போயுள்ள நிலையில், இணையதள இளசுகளை மட்டுமே குறி வைத்து வாரா வாரம் அந்த மாதிரியான ‘கிளுகிளு’ வெப் தொடர்களை பலரது எதிர்ப்புகளையும் மீறி தனது ஆர்ஜிவி வேல்ட் தியேட்டர் என்ற டிஜிட்டல் தளத்தில் வெளியிட்டு, பணத்தை கோடிகளில் குவித்து வருகிறார்.
சமூக வலைத்தளங்களில் அடிக்கடி சர்ச்சை கருத்துக்களையும் புகைப்படங்களையும் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வரும் இவர், தற்போது தனது ட்விட்டரில், ராம்கோபால் வர்மா நடிகை சோனியா நரேசின் தொடையில் முத்தமிடுவது போன்று எடுக்கப்பட்ட ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
அப்புகைப்படத்துடன், “இந்த புகைப்படத்தில் இருப்பது நான் தான். இது சோனியா நரேசின் தொடை தான். இந்த ஃபோட்டோவை எடுத்தது இன்னொரு நடிகை நைனா கங்குலி தான். அவர் திறமையான நடிகை என்பதை தாண்டி திறமையான போட்டோகிராபரும் கூட எனவும் பதிவிட்டுள்ளார்.
ஒரு நடிகையின் தொடையில் பிரபல இயக்குனர் முத்தமிடுவதை மற்றொரு நடிகையே புகைப்படம் எடுத்ததாக குறிப்பிட்டுள்ள ராம்கோபால் வர்மாவுக்கு நெட்டிசன்கள் பலரும் கடும் எதிர்ப்பும் கண்ணடங்களையும் பதிவு செய்து வருவதோடு, கவர்ச்சியை மட்டுமே நம்பி படமெடுக்கும் நீங்கள் கதையை நம்பியும் படம் எடுங்கள் என அறிவுரை வழங்கி உள்ளனர்.
This pic of ME and the THIGH of https://t.co/6N6KI99A9K has been taken by https://t.co/OmKY07Y9i6
Hey @NainaGtweets apart from being a talented actress u also have a talent in photography 🙏 pic.twitter.com/JLKvNF01ly— Ram Gopal Varma (@RGVzoomin) June 5, 2021