கமல்ஹாசனின் நடிப்பில் பக்கா கமர்சியல் ஆக்சன் படமாக உருவாகும் ‘விக்ரம்’ படத்தின் வேலைகளை முழுவேகத்தில் தொடங்கியுள்ள இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தற்போது அதிரடி ட்வீட் ஒன்றையும் வெளியிட்டுள்ளார். கபாலி, கேஜிஎஃப், கைதி, ராதே, உள்ளிட்ட பல படங்களுக்கு ஸ்டன்ட் இயக்குநர்களாக பணியாற்றிய அன்புஅறிவு (இரட்டையர்கள்) விக்ரம் படத்தில் இணைந்துள்ளனர் என்கிற அதிரடி அறிவிப்பை புகைப்படத்துடன் வெளியிட்டுள்ளார். இதையடுத்து ஊரடங்கு தளர்வுகளின் அடிப்படையில் அரசு மீண்டும் படப்பிடிப்புகள் நடத்த அனுமதிக்கும் பட்சத்தில் முதலில் விக்ரம் படப்பிடிப்பு தொடங்கும் என்றும், கோர்ட் தீர்ப்பை பொறுத்து கமல் இந்தியன்-2 படத்திலும் நடிக்கலாம் என்கிறார்கள் ஆக இப்போதைக்கு கமலுக்கு பாபநாசம்-2 பத்தில் நடிக்கும் எண்ணம் எதுவும் கிடையாது என்கிறது கமல் தரப்பு.