“எனது படுக்கை அறை பங்காளி கெரிங்தான்!”ஹாலிவுட் நடிகையின் ஆந்தை காதல்.!

சல்மா ஹயக் . ஹாலிவுட் நடிகை. இவரைப்பற்றி என்ன சேதி ?மேலைநாட்டு நடிகையென்றால் அடிக்கடி கணவனை மாற்றுவார்கள் அதானே என யாராவது அங்கலாய்த்தால் அவர்களுக்கு ஏமாற்றம்தான்.!
பொதுவாக ஆந்தை என்றாலே நம்மவர்களுக்கு அலர்ஜி. வவ்வாலும் ஆந்தையும் வீட்டுக்குள் நுழைந்து விட்டால் எதோ கேடு வரப்போகிறது என்று பயந்து விரட்டிவிடுவார்கள்.
வீட்டுக்கு ஆகாத பறவை ஆந்தை என்கிற நம்பிக்கை.! ஆனால் ஹாலிவுட் நடிகைக்கு அதுவே செல்லப்பறவை.! கணவர் வெளியூர் சென்று விட்டால் படுக்கையை “ஷேர் “செய்து கொள்வது இந்த ஆந்தைதான். ! பெட்டை ! நடிகையின் வயது 54.
நடிகை என்றாலும் அவர்களுக்கும் மன அழுத்தம் என்பது இயல்பானது.
அதை தியானம் செய்வதன் வழியாக போக்கிக்கொள்கிறார்.
இதில் என்ன வேடிக்கை என்றால் அவருடன் அவரது செல்லப்பிராணி ஆந்தை கெரிங் கூடவே தியானம் செய்கிறது.
நடிகையின் தோள் ,அல்லது தலையில் அமர்ந்து கொண்டு அமைதி காக்கும்.
மற்ற சாதாரண நேரங்களில் ஆந்தை ஐ பேடில் டிவி நிகழ்ச்சிகளைப்பார்க்கும், நடிகையுடன் சேர்ந்தே உணவு சாப்பிடும்.
ஆந்தைக்கு ஒயின் மிகவும் பிடித்தமான மது. ரசித்துக்குடிக்கிறது என்கிறார் நடிகை.சல்மா மது அருந்தும் போது ஆந்தையும் கம்பெனி கொடுக்கிறது.
“கெரிங்குடன் சேர்ந்து இருப்பது தனக்கு மிகவும் பிடித்தமானது”என்கிறார் நடிகை சல்மா ஹயக்