“பன்னீர் மஷ்ரும் ‘ செய்வது எப்படி?” சிலம்பரசனிடம் கேளுங்க.!

கணவன் அமைவதெல்லாம் கடவுள் கொடுத்த வரம் என்றாகிவிடும் போலிருக்கிறது ,போகிற போக்கைப்பார்த்தால்.!
சமையல் கலையில் பிரபல நடிகர்கள் பின்னி எடுக்கிறார்கள் .அஜித்குமாருக்கு அடுத்த இடம் சிலம்பரசனுக்குத்தான் !
விதம் விதமாக சமைக்கிறார் ! இவரை கல்யாணம் செய்கிறவர்கள் புண்ணியவதிகள்.!
‘ஈஸ்வரன்’ படத்தை தொடர்ந்து எஸ்.டி .ஆர் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில், ‘மாநாடு’ திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார்.
சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ள இந்த திரைப்படத்தில் கல்யாணி ப்ரியதர்ஷன், எஸ்.ஜே.சூர்யா, எஸ்.ஏ.சந்திரசேகர், பிரேம்ஜி, கருணாகரன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள இப் படத்தின் முதல் சிங்கிள் பாடல் கடந்த ஜூன் 21-ஆம் தேதி வெளியானது.
இதனைத் தொடர்ந்து படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்புக்காக அவரது ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.
இதையடுத்து சிம்பு, ‘பத்து தல’ படத்தில் கவுதம் கார்த்தியோடு இணைந்து நடித்து வருகிறார். இந்நிலையில் தனது சமையலறையில் சிலம்பரசன் மிகவும் ஜாலியாக சமைக்கும் ‘த்ரோபேக்’ வீடியோ ஒன்றை அவரே தமது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.
அதில், “பன்னீர் மஷ்ரூம் செய்கிறேன்.. லாக்டவுன் என்பதால் ஷேவ் பண்ணிவிட்டேன்..என் முகமே இப்பதான் எனக்கு தெரியுது. ( ரொம்பவும் அழகாக இருக்கீங்க ப்ரோ! ) இவ்வளவு நாள் தாடியே வெச்சிருந்ததால் தெரியல..” என தன்னை வீடியோ எடுக்கும் சையது நிவாஸிடம் பேசிக்கொண்டே நடிகர் சிம்பு சமைக்கிறார்.
சிம்புவின் சமையல் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இதற்கு முன் சிம்பு தன வருங்கால மனைவிக்காக ‘சிக்கன்’ சமைக்கும் வீடியோ ஓன்று வைரலானது குறிப்பிடத்தக்கது.