மாநகரம்,கைதி,மாஸ்டர் படங்களைத் தொடர்ந்து இயக்குநர் லோகேஷ் கனகராஜ், உலகநாயகன் கமல்ஹாசன் நடிக்கும் விக்ரம் படத்தை இயக்கி வருகிறார். கடந்த ஆண்டு இப்படத்தின் பணிகள் தொடங்கின. கமலின் 232-வது படமாக உருவாகும் இப்படத்தை கமலின் சொந்த தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.இப்படத்தில் பகத்பாசில்,விஜய்சேதுபதி நரேன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியான நிலையில், சமீபத்தில் இப்படத்திலிருந்து விஜய்சேதுபதி வெளியேறி விட்டதாகவும் கிசுகிசுக்கப்பட்டது.இந்நிலையில், இப்படத்திற்கான போட்டோ ஷூட் சென்னையில் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று மாலை வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.அப்போஸ்டருடன் “வீரமே வாகையைச் சூடும். மீண்டும் துணிகிறேன், நம் இளம் திறமைகளை உம் முன் சமர்ப்பிக்க.
நேற்றே போல நாளையும் நமதாக வாழ்த்தட்டும் தாயகம்.
விக்ரம்… விக்ரம்”…என்றும் பதிவிட பட்டுள்ளது. கமல் இதில் இன்டர்போல் அதிகாரியாக நடித்து வருகிறார்.இப்படம் முழுக்க, முழுக்க க்ரைம் த்ரில்லர் பாணியில் உருவாகிறது. சென்னையிலேயே ஒரே கட்டமாக இப்படத்தின் படப்பிடிப்பை முடித்து, ‘இந்தியன் 2’ படத்துக்கு முன்பாகவே வெளியிடப் படக்குழு முடிவு செய்துள்ளது.