திரைப்பட இசைக்கலைஞர்கள் சங்கத்தின் கவுரவ உறுப்பினர் ஆனார் கமல்ஹாசன்!
திரை இசைத் துறையில் 46 ஆண்டு காலம் பல பாடல்களை பாடி, மக்களின் மனதில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துள்ள உலகநாயகன் கமல் ஹாசனுக்கு, திரைப்பட இசைக் கலைஞர்கள் சங்கத்தின் தலைவர் தினா,பொதுச் செயலாளர் ஜோனாபக்த குமார் எஸ்.ஓ. அறக்கட்டளை சேர்மன் எஸ்ஏ ராஜ்குமார் ஆகியோர் இன்று காலை கமல்ஹாசன் அலுவலகத்திற்கு நேரில் சென்று,அவரிடம் திரைப்பட இசை கலைஞர்கள் சங்கத்தின் அடையாள அட்டையை வழங்கினார்.
சுமார் 1500 உறுப்பினர்கள் கொண்ட எங்கள் சங்கத்தில் உலகநாயகன் இணைந்தது சங்கத்திற்கும் இசைக் கலைஞர்களுக்கும் திரைப்படத் துறைக்கும் பெருமை சேர்த்துள்ளதாக தலைவர் தினா மகிழ்வுடன் கூறினார்