
இராமேஸ்வரம் சென்றிருந்த கீர்த்தி சுரேஷ் ஆலய தரிசனம் செய்தபின்னர் அங்குள்ள கடற்கரைக்கு சென்று சூரியன் மறைவதைப்பார்த்து ரசித்தார்.
மற்றுமொரு சிறப்பான செய்தி.
இதுவரை தமிழக நடிகர்கள் எவரும் சாதித்திராத சாதனை.
தனுஷ் தற்போது தமிழ் மட்டுமில்லாமல் சர்வேதச அளவிலான படங்களிலும் நடிக்கத் தொடங்கியுள்ளார்.
இரண்டு ஹாலிவுட் படங்களில் நடித்துள்ள தனுஷ் தற்போது அவெஞ்சர்ஸ் படத்தின் இயக்குநர்கள் ரஸ்ஸோ பிரதர்ஸ் படத்தில் ( ‘தி கிரே மேன்’ ) நடித்து முடித்துள்ளார். கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷ் நடித்து வருகிறார். அதையடுத்து அண்ணன் செல்வராகவன் இயக்கத்தில் நடிக்கப்போகிறார் .
‘ஒய் திஸ் கொலவெறி டி’ , ‘ரவுடி பேபி’ ஆகிய பாடல்கள் வழியாக ஒரு உலகளாவிய ஹிட் கொடுத்துள்ளார்.
தனுஷ் தற்போது ட்விட்டரில் புதிய சாதனை படைத்துள்ளார். , தனுஷுக்கு ட்விட்டரில் 10 மில்லியன் அதாவது ஒரு கோடி பின் தொடர்பாளர்கள் கிடைத்திருக்கிறார்கள். இத்தனை பாலோயர்ஸ்களைப் பெற்ற முதல் தமிழ் நடிகர் தனுஷ் தான்.












