புரட்சிகர வாலிபனாக அதர்வா! தாக்குப்பிடிப்பாரா?

“குங்கும பூவும் கொஞ்சும் புறாவும்”, “வானவராயன் வல்லவராயன்” படங்களை இயக்கிய ராஜாமோகன் “அட்ரஸ்” படத்தை இயக்கிவருகிறார்.
இந்த நாட்டில் ‘அட்ரஸ்’ இல்லாத ஒரு ஊர். ஆமாம்.. 1956-ல் மொழிவாரி மாநிலமாக பிரிக்கிற போது தமிழ்நாட்டுக்கும் கேரளாவுக்கும் நடுவில் சிக்கி கொண்டு தனது ‘அட்ரஸை’ தொலைத்த கிராமத்துக்கு அட்ரஸ் கிடைத்ததா இல்லையா என்பதே இப்படத்தின் கதை. தல அஜித் குமார் நடித்த ஒரு படத்தின் நினைவு வருகிறதா? அது வேற.இது வேற என்கிறார்கள்.
உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு இப்படத்தை மிக திரில்லாக இயக்கிவரும் இதன் படபிடிப்பு, சமீபத்தில் நடந்தது. அத்துடன் படபிடிப்பு முடிவடைந்தது.
அதர்வாவுக்கு புரட்சிகரமான ‘காளி’ என்கிற ஒரு இளைஞன் வேடமாம். இந்த கேரக்டரில் அதர்வாமுரளி நட்புக்காக நடித்திருக்கிறார். இக்கதையில் இவரது ஜோடியாக பூஜா ஜவ்வேரி நடிக்கிறார்.
மேலும், இசக்கி பரத், புதுமுகம் தியா, தம்பிராமையா, தேவதர்ஷினி, ஏ.வெங்கடேஷ், மெட்ராஸ் நந்தகுமார், நாகேந்திரன், கோலிசோடா முத்து மற்றும் பலர் நடிக்கிறார்கள்.
இதனுடைய படப்பிடிப்பு, மலையும்.. மலை சார்ந்த பகுதிகளில் நடைபெற்றது. கொடைக்கானலில் இருந்து 8 கிலோமீட்டர் நடந்து நடந்து சென்று வெள்ளக் கவி என்ற கிராமத்தில் படப்பிடிப்பு நடத்தியுள்ளார்கள். படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் இறுதிகட்ட பணிகள் தீவிரமாக நடைபெறுகிறது.