நண்பர்களுக்கும், ரசிகர்களுக்கும் வணக்கம்! இன்று வியாழக்கிழமை என் வாழ்க்கையில் மிகவும் முக்கியமான நாள்.
இந்தியாவில் முதன்முறையாக 15 அடி உயரத்தில் உருவாக்கப்பட்ட ராகவேந்திர சுவாமியின் பளிங்கு சிலையை இன்று பிரதிஷ்டை செய்துள்ளேன்.
இந்த நற்செய்தியை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். சாதாரண மனிதனாக இருந்த என்னை இந்த உயரத்துக்கு அடையாளம் காட்டியவர் அந்த ராகவேந்திர சுவாமியின் அருள் தான் என்று இன்றுவரை நம்புகிறேன்.
இத்தருணத்தில் ராகவேந்திர சுவாமியின் மிகப்பெரிய சிலையை உருவாக்குவதே எனது கனவாக இருந்தது. அந்த கனவு தற்போது நனவாகியுள்ளது என்பதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்!
எனது ரசிகர்கள் மற்றும் அனைத்து ராகவேந்திரர் பக்தர்களுக்கும் அனைவருக்காகவும் பிரார்த்திக்கிறேன்! குருவே சரணம்!
அன்புடன் ராகவா லாரன்ஸ்.