கமல் பிறந்தநாள்; முதல்வர், திரையுலக பிரபலங்கள் வாழ்த்து!

உலக நாயகன் கமலஹாசன் இன்று தனது 67 வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு  தமிழக முதல்வர்,அரசியல் பிரபலங்கள்,திரையுலகபிரபலங்கள், ரசிகர்கள்,    என பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

தமிழக முதல்வர் முக ஸ்டாலின்: 

இந்தியத் திரையுலகின் மிகச் சிறந்த நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான அன்பு நண்பர் ‘கலைஞானி’

அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். நலமுடன் நற்பணிகளைத் தொடர்ந்திட வாழ்த்துகிறேன்.

கவிஞர் வைரமுத்து :

எம்.ஜி.ஆர் பற்றிக் கலைஞர் சொன்னதுபோல் கமல் பற்றி நானும் சொல்லலாம்: “என் நாற்பதாண்டுகால நண்பர்” தனிவாழ்வு கலைவாழ்வு பொதுவாழ்வு மூன்றிலும் பட்டுத் தெளிந்த பட்டறிவாளர் வெற்றி தோல்வி அவரை என்செய்யும்? தலைகீழாய்ப் பிடித்தாலும் மேல்நோக்கி எரியும் தீச்சுடர் எரி சுடரே எழு சுடரே!

இயக்குநர் மோகன்ராஜா:

ஹேப்பி பர்த் டே கமலஹாசன் சார். எப்போதும் உங்களின் மிகப் பெரிய ரசிகனாக இருப்பதில் பெருமை கொள்கிறேன்.

 ஆர்யா:

மாபெரும் கலைஞர் கமலஹாசன் சாருக்கு அற்புதமான பிறந்தநாள் வாழ்த்துக்கள். இந்த ஆண்டு சிறப்பாக அமைய வாழ்த்துக்கள். உங்களின் விக்ரம் படத்தை பார்க்க காத்திருக்க முடியவில்லை

 குஷ்பு:

எனக்கு பிடித்த எனது அருமை நண்பர் கமலஹாசனுக்கு இனிமையிலும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். நீங்கள் எனது வாழ்க்கையில் எப்போதும் மகவும் ஸ்பெஷலான மனிதர்.

ராதிகா சரத்குமார்:

ஹேப்பி பர்த்டே கமலஹாசன். சினிமாவிலும் எனது வாழ்க்கையிலும் தவிர்க்க முடியாத ஒரு மனிதர். என்ன ஒரு அற்புதமான பயணம். அதிகமான வலிமையும், இன்பமும் உங்களுக்கு கிடைக்கட்டும்