சிம்புவின் ‘மாநாடு’ ஆடியோ ரிலீஸ் எப்போது? சுரேஷ் காமாட்சி அதிரடிஅறிவிப்பு!
சிம்பு நடிப்பில், வெங்கட் பிரபு இயக்கத்தில் ,சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் உருவாகியுள்ள புதிய படம் மாநாடு. இதில்,சிம்பு அப்துல் காலிக் என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.சிம்புவுக்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷனும், வில்லனாக எஸ்.ஜே.சூர்யாவும் நடித்துள்ளனர்.
இப்படத்தின்அனைத்து பணிகளும் நிறைவடைந்த நிலையில், கடந்த 4ஆம் தேதி தீபாவளியன்று வெளியாகும் என அதிகாரப்பூர்வாமாக அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில், திடீரென ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டு வரும் நவம்பர் 25ம் தேதி மாநாடு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இப்படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தனது சமூக வலைத்தள பக்கத்தில் ‘மாநாடு’ படத்தின் ஆடியோ ரிலீசுக்கு தயாராக உள்ளோம். விரைவில் தேதியை அறிவிக்க இருக்கிறோம். காத்திருங்கள்’ என்று பதிவிட்டுள்ளார் .இது சிம்பு ரசிகர்கள் மத்தியில் பெரும் உற்சாகத்தையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.