அவ்னி டெலி மீடியா நிறுவனம் சார்பில் குஷ்பூ சுந்தர்.சி தயாரித்து வழங்கும் புதிய படம் பட்டாம்பூச்சி.இதில் ,கொடூர சைக்கோவாக முதன்முறையாக நெகட்டிவ் ரோலில் ஜெய்யும், அவனை சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனை வாங்கித் தரத் துடிக்கும் காவல்துறை அதிகாரியாக சுந்தர்.சியும் நடிக்கின்றனர். கதாநாயகியாக ஹனிரோஸ், முக்கிய கதாபாத்திரத்தில் இமான் அண்ணாச்சி ,பேபி மானஸ்வி ஆகியோர் நடிக்கின்றனர்.
1980களில் நடக்கும் சைக்கோ திரில்லர் கதை தான் பட்டாம்பூச்சி. பல கொலைகளை செய்த ஒரு கொடூர சைக்கோ கொலைகாரனுக்கும், பொறுப்புகளை தவிர்த்து அமைதியாக வாழ நினைக்கும் ஒரு காவல்துறை அதிகாரிக்கும் நடக்கும் மைண்ட் கேம் தான் கதை. ஒருவரை ஒருவர் புத்திசாலித்தனத்தாலும் உடல் பலத்தாலும் முந்த துடிப்பது திரைக்கதையில் கூடுதல் பலம். செய்யாத ஒரு கொலைக்காக தூக்கு தண்டனை பெறப்போகும் சுதாகர் தண்டனைக்கு இரண்டு நாட்களுக்கு முன் தான் இன்னும் போலீசுக்கு பிடிபடாத பல கொலைகளை செய்த சைக்கோ கொலைகாரன் பட்டாம்பூச்சி என்ற ரகசியத்தை ஒரு நிருபரிடம் சொல்ல அங்கிருந்து வேகம் பிடிக்கும் கதை ஒவ்வொரு காட்சியிலும் நம்மை இருக்கையின் நுனிக்கு வரவழைக்கும்.
கொடூர சைக்கோவாக முதன்முறையாக நெகட்டிவ் ரோலில் ஜெய்யும், அவனை சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனை வாங்கித் தரத் துடிக்கும் காவல்துறை அதிகாரியாக சுந்தர்.சியும் நடிக்கின்றனர். கதாநாயகியாக ஹனிரோஸ், முக்கிய கதாபாத்திரத்தில் இமான் அண்ணாச்சி ,பேபி மானஸ்வி ஆகியோர் நடிக்கின்றனர். ஒளிப்பதிவு கிச்சா, இசை நவநீத் சுந்தர், எடிட்டிங் பென்னி ஆலிவர், கலை பிரேம், சண்டைப்பயிற்சி ராஜசேகர், திரைக்கதை நரசிம்மன் மகா கீர்த்தி, கதை வசனம் இயக்கம் பத்ரி. டிசம்பரில் இப்படம் வெளியாக உள்ளது.
—