சுதந்திரம் குறித்து கங்கனா அவதூறு:பத்மஸ்ரீ விருதை திரும்ப பெற காங்கிரஸ் வலியுறுத்தல்!

சர்ச்சை கருத்துக்களை அடிக்கடி தனது ட்விட்டரில் வெளியிட்டு, பலரின் எதிர்ப்பை சமாப்திப்பதை வழக்கமாக கொண்டுள்ளார் பாலிவுட் நடிகை கங்கனா.ரனாவத்.இவரின் சர்ச்சை கருத்துக்களால் இவரின் கணக்கை, டிவிட்டர் நிர்வாகம் முடக்கியது. இதையடுத்து, இன்ஸ்டாகிராமில் தனது புதிய கணக்கை தொடங்கி கருத்துக்களையும், புகைப்படங்களையும் அவ்வப்போது பதிவிட்டு வருகிறார் கங்கனா ரணாவத்.இந்நிலையில் சமீபத்தில் திரைத்துறையில் சிறப்பான பங்களிப்பை அளித்ததற்காக ஜனாதிபதி ராம்நாத் கோவிந்திடம் இருந்து பத்மஸ்ரீ விருதினை பெற்ற கங்கனா, தனியார் டி.வி. சேனல் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று பேசுகையில், ‘1947ல் நம் நாடு பெற்றது சுதந்திரம் அல்ல, பிச்சை. உண்மையான சுதந்திரம் 2014ல் தான் கிடைத்தது என சர்ச்சைக்குரிய வயைில் கருத்து தெரிவித்து இருந்தார்.இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது.பலரும் கடும் கண்டனங்கள் தெரிவித்து வந்த நிலையில், கங்கனா ரணாவத் இன்ஸ்டாகிராமில்,
“மணிகர்னிகாவில் லட்சுமி பாயாக நடித்தேன். அப்போது 1857ல் நடந்த முதல் இந்திய சுதந்திர போர் பற்றி விரிவாக படித்தேன்.ஆங்கிலேயர்களுக்கு எதிராக ராணி லட்சுமி பாய் உட்பட பலர் அந்த போரில் உயிர் தியாகம் செய்துள்ளனர். அவர்களை தொடர்ந்து பால கங்காதர திலகர், பகத் சிங், நேதாஜி சுபாஷ் சந்திர போஸ், வீர சாவர்க்கர் உட்பட பலரும் தியாகங்களை செய்து உள்ளனர்.மஹாத்மா காந்தி நினைத்திருந்தால் பகத் சிங்கை காப்பாற்றியிருக்க முடியும். ஆனால் காப்பாற்றவில்லை.நேதாஜியின் இந்திய தேசிய ராணுவத்துக்கு மஹாத்மா காந்தி ஆதரவு தெரிவிக்கவில்லை. அவர் ஆதரவு தெரிவித்திருந்தால் ஆங்கிலேயர்களுக்கு எதிரான போரில் வெற்றி பெற்று நேதாஜி பிரதமராகியிருப்பார். நம் நாட்டை ஆங்கிலேயர்கள் முழுமையாக கொள்ளையடித்துவிட்டு, மஹாத்மா காந்தி ஏந்திய பாத்திரத்தில் சுதந்திரம் என்ற பெயரில் பிச்சை தான் போட்டனர்.

எனக்கு தெரிந்தவரை 1947ல் எந்த போரும் நடக்கவில்லை. நடந்திருந்தால் அது பற்றி யாராவது சொல்லட்டும்.தேசத்தை வெள்ளையர்கள் ஏன் பிரித்தனர். 1947ல் சுதந்திரத்தை கொண்டாடுவதற்கு பதில், மக்கள் ஒருவருடன் ஒருவர் அடித்துக் கொண்டது ஏன்? இதற்கான பதில்களை யாராவது சொல்லட்டும். அதன்பின் 1947ல் பெற்ற சுதந்திரத்தை பிச்சை என கூறியதற்காக பகிரங்கமாக மன்னிப்பு கேட்டு, எனக்கு வழங்கப்பட்ட பத்ம ஸ்ரீ விருதையும் திருப்பி கொடுத்து விடுவேன்.இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார் இதைப்பார்த்த நெட்டிசன்கள் பலரும், நாட்டுக்கு கிடைத்த சுதந்திரத்தை பிச்சை என கூறி, நாட்டையே கங்கனா அவமானப்படுத்தியுள்ளார். கங்கனாவுக்கு வழங்கப்பட்ட அனைத்து தேசிய விருதுகளையும் மத்திய அரசு திரும்ப பெற வேண்டும்.என் காங்கிரசார்உள்பட பல்வேறு அரசியல் கட்சிகளும்  மத்திய அரசை வலியுறுத்தி வருகின்றனர்