ஜெய் பீம்’ பட விவகாரத்தில் நடிகர் சூர்யாவுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் இயக்குனர் வெற்றிமாறன் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது,”இந்தப் படத்தின் மூலம் பாதிக்கப்பட்டவர்களின் அவல நிலையை உலகறியச் செய்ய வேண்டும் என்ற இயக்குநர் த.செ.ஞானவேலின் பொறுப்புணர்வும், சமூக நீதியை நிலைநிறுத்துவதில் திரையிலும், நிஜத்திலும் நடிகர் சூர்யா மேற்கொள்ளும் தொடர் முயற்சிகளும் உண்மையிலேயே ஊக்கமளிக்கின்றன.
இத்தகைய படங்கள் சமூக நீதி ஏற்படக் கூடாது என விரும்புவோருக்கு பதற்றத்தை ஏற்படுத்துவது இயல்பே. #WeStandWithSuriya சமூகத்தில் நிலவும் பேதங்களையும், அநீதிகளையும் கேள்வி கேட்கும் திரைப்படங்களும் கூட சமூக நீதி ஆயுதங்களே. ஆகையால் நாங்கள் ஜெய் பீம் படக்குழுவுடன் எப்போதும் நிற்கிறோம் என்று பதிவிட்டுள்ளார்.