“கோப்பையை கொண்டு வருவாய்ங்கன்னு எதிர்பார்த்தா ,கொடுமையை கொள்முதல் பண்ணிட்டு வந்திருக்காங்ய்ங்க ” என்கிற குமுறல் கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் இருக்கிறது.
அப்படி என்ன அக்கப்போர் நடந்திருக்கிறது?
இந்திய கிரிக்கெட் அணியைச் சேர்ந்தவர் ஹர்திக் பாண்டியா.
துபாயில் இந்திய அணிக்காக விளையாடிவிட்டு தாயகம் திரும்பியிருக்கிறார்.
மும்பை ஏர்போர்ட்டில் வழக்கமாக நடைபெறுகிற சுங்கச்சோதனை.
விலை உயர்ந்த இரண்டு கைக்கடிகாரங்கள் .ஒன்றின் மதிப்பு ஒன்னரை கோடி ! மற்றொன்றின் மதிப்பு 50 லட்சம்.
இரண்டில் ஒன்றுக்கு முறையான பில் இருக்கிறது!
மற்றொண்டுக்கு ,இல்லை.!
இதனால் பாண்டியாவின் இரண்டு கைக்கடிகாரமும் மும்பை விமான நிலைய கஸ்டம்ஸ் அதிகாரிகளிடம்.!
“உரிய பில்களை கொடுத்து விட்டு உங்களின் உயரிய கடிகாரங்களை பெற்று செல்க”என சொல்லிவிட்டது.!