கொரோனா தொற்று காரணமாக நடிகர் கமல்ஹாசன் சென்னை தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.கொரோனா தொற்று பாதிப்பு குறித்து கமல்ஹாசனே தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டு இருந்தார்.
இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த், கொரோனா தொற்று காரணமாக சிகிச்சைபெற்று வரும் நடிகர் கமல்ஹாசனிடம் தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு நலம் விசாரித்துள்ளார். விரைவில் குணமடைந்து கமல் வீடு திரும்பவும் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே நடிகர் கமல்ஹாசன்விரைவில் பூரண குணம் அடைந்து நலமுடன் வீடு திரும்ப இயக்குனர்கள் எஸ்.பி. முத்துராமன்.லோகேஷ் கனகராஜ்,அட்லீ, பேராசிரியர் ஞானசம்பந்தம் நடிகர்கள் பிரபு,ஆர்.சரத்குமார், விஜய்சேதுபதி சந்தானபாரதி,ஐசரி கணேஷ்,ராதாரவி,பகத் பாசில், ராஜேஷ்,சிவகார்த்திகேயன்,விஷ்ணு விஷால்,விஜய்டிவி குட்டி சிவாஜி பிலிம்ஸராம்குமார்,விக்ரம் பிரபு மற்றும் ஏ.சி.சண்முகம் உள்பட திரையுலகினர் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.