காதல் மனைவியுடன் வில்லன் நடிகர் ‘பாக்ஸிங்’!
பா.ரஞ்சித்தின் இயக்கத்தில் வெளியான “சார்பாட்டா பரம்பரை“ படத்தில் “வேம்புலி“ என்ற வில்லன் கதாபாத்திரத்தில் நடித்தவர் மலையாள நடிகர் ஜான் கொக்கேன். இவர் ஏற்கனவே அஜித்தின் “வீரம்“ படத்தில் நடித்துள்ளார்.
இந்நிலையில் நடிகர் ஜான் கொக்கேன் கடந்த 2019 ஆம் ஆண்டு நடிகை பூஜா ரவிச்சந்திரனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில்,தனது காதல் மனைவி நடிகை பூஜா ரவிச்சந்திரனுடன் இணைந்து பாக்சிங் செய்வது போன்று,’ரிங்’கிற்குள் நின்றுகொண்டு வித்தியாசமான போட்டோஷுட் நடத்தியுள்ளனர்
. பூஜா ரவிச்சந்திரன்.தமிழில் “பீட்சா“, “களம்“, “காதலில் சொதப்புவது எப்படி“, “காஞ்சனா 2“ உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். இந்த ஜோடியின் ரொமான்ஸ் செய்யும் புகைப்படங்களைப் பார்த்த நெட்டிசன்கள் பலரும்,ஹீரோ- ஹீரோயினை மிஞ்சும் அளவிற்கு ரொமான் ஸில் கலக்குறீங்க… என ‘டுவிட்டி’ வருகின்றனர்.