பா.ரஞ்சித் இயக்கத்தில் சீயான் விக்ரம்!

சீயான் விக்ரம் தற்போது கோப்ரா, மகான், பொன்னியின் செல்வன் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இவற்றில் மகான், பொன்னியின் செல்வன் ஆகிய படங்களின் படப்பிடிப்புகள் முடிந்து இறுதிக்கட்ட  பணிகள் நடந்து வருகிறது
கார்த்திக் சுப்புராஜ்  இயக்கத்தில்உருவாகியுள்ள   மகான் திரைப்படத்தில் விக்ரம் தனது மகன் துருவ் வுடன்  இணைந்து நடித்துள்ளார்.
2 படங்களும் அடுத்தடுத்து திரைக்கு வர இருக்கின்றன.
இந்த படங்களுக்கு பிறகு விக்ரம் நடிக்கும் 61-வது படம் பற்றிய எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் நிலவுகிறது.
இந்நிலையில் விக்ரம் நடிக்க உள்ள அடுத்த படத்தை பா.ரஞ்சித் இயக்குகிறார் .கே.ஈ ஞானவேல் ராஜா இப்படத்தை தயாரிக்கிறார்.ஸ்டூடியோ க்ரீன் தயாரிப்பு நிறுவனத்துக்கு இது 23 ஆவது திரைப்படம்.  இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளதாக அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.