முகேன் ராவ், திவ்ய பாரதி நடிப்பில் உருவான “மதில் மேல் காதல்”!

 ‘வெப்பம்’ அஞ்சனா அலிகான் இயக்கத்தில் உருவாகியுள்ள இதில், “மதில் மேல் காதல்”  இதில்,முகேன் ராவ் மற்றும் திவ்ய பாரதி ஆகியோர் நாயகன் நாயகியாக நடிக்க,இவர்களுடன்,சாக்‌ஷி அகர்வால், அனுஹாசன், கஸ்தூரி, பாண்டியராஜ், சுப்பு பஞ்சு, நிழல்கள் ரவி, சுரேகா, தீப்ஸ்,கேபி ஒய்  பாலா, ஆலியா, ஹாட்லீ, வைதேகி, ஸ்ரீநிதி, சிராஜ், ஜெய் சங்கர் செல்வராஜ், வாசு விக்ரம் மற்றும் ராஜி சாரதி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில்  நடிக்கின்றனர்.

இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் தற்போது வெளியாகியுள்ளது.‘மதில் மேல் காதல்’ திரைப்படம் குறித்து இயக்குநர் அஞ்சனா அலிகான் கூறியதாவது, ‘மதில் மேல் பூனை’ என்ற சொற்றொடர் எல்லோருக்கும் நன்கு பரிச்சயமானது, அது சுவற்றில்  இருபுறமும் தாவிச் செல்ல வசதியாக அமர்ந்திருக்கும் பூனையை குறிக்கும். படத்தின் கதாநாயகன் அந்த மாதிரியான பூனையின் மன நிலையை கொண்டவன். அவன் தனது மனநிலையை அடிக்கடி மாற்றிக் கொள்ளக்கூடியவன். ஒரு கணத்தில் தனது காதலியைப் பற்றி பைத்தியமான மனநிலையில் இருக்கும் ஒருவன், அடுத்த கணம் காதல் எனும் உணர்வையே  முழுமையாக வெறுக்கிறான்.

அதனால் “மதில் மேல் காதல்” என்ற தலைப்பு இப்படத்திற்கு கச்சிதமாக இருக்கும் என்று உணர்ந்தோம். இது ஒரு வண்ணமயமான மற்றும் இளமை நிறைந்த ஒரு ரோம்-காம், முழுப்படமும்  பார்வையாளர்களை மயக்கும்படி இருக்கும். மேலும் இப்படம்  திரையரங்குகளில் ரசிகர்களை புன்னகை மலர்ந்த முகத்துடன்  இருக்க வைக்கும். மதில் மேல் காதல் படத்தின் கதை,  பார்த்தவுடன் காதலில் விழும் ஒரு ஜோடி, காதலின் உறவை தக்க வைத்துக் கொள்ள அன்பு  மட்டுமே போதாது என்பதை உணர்வதை பற்றியது.

இப்படம் காதல், நகைச்சுவை மற்றும் பொழுதுபோக்கு அமசங்களை சம அளவில் கொண்டிருக்கும் ஒரு அட்டகாசமான ரோம்-காம் திரைப்படம் என்கிறார். இப்படத்தின்  ஒளிப்பதிவை   கௌதம் ஜார்ஜ்  கவனிக்க, நிவாஸ் கே. பிரசன்னா இசையமைத்து வருகிறார்.