பிக்பாஸ்- 5 நிகழ்ச்சியை உலக நாயகன் தொகுத்து வழங்கி வந்த நிலையில்,சமீபத்தில் அமெரிக்கா சென்று வந்த அவருக்கு திடீரென கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட, உடனடியாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.அவ ருக்கு பதில்,பிக்பாஸ் நிகழ்ச்சியை கடந்த வாரம் சனி ஞாயிறு என இரண்டு நாட்களும் நடிகை ரம்யாகிருஷ்ணன் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.
இந்நிலையில்,அவர் கொரோனாவில் இருந்து பூரண குணமாகி விட்டதாகவும்,என்றாலும், கமல்ஹாசன் (டிசம்பர் 3ஆம் தேதி) வரை தன்னை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் நாளை ( 4ஆம் தேதி) முதல் அவர் தனது வழக்கமான பணிகளைதொடங்கலாம் என்றும் மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு இருந்தது.
இந்நிலையில், இன்றுடன் கமல்ஹாசனின் குவாரன்டைன் பீரியட் முடிவடைந்துள்ளது.இதையடுத்து, நாளை முதல் அவர் தனது வழக்கமான பணிகளை தொடங்குகிறார்.இந்நிலையில், நாளை நடக்கும் பிக்பாஸ்-5 நிகழ்ச்சியிலும் அவரே கலந்து கொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.