பிறந்த நாளில் ரஜினி வெளியிட்ட புதிய அறிவிப்பு!

நடிகரும் தமிழ்த் திரையுலக சூப்பர் ஸ்டாரும் இந்திய பிரபல நடிகருமான ரஜினிகாந்த், இன்று தன்னுடைய 72-ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

நடிகர் ரஜினிகாந்துக்கு தமிழக முதல்வர் முக ஸ்டாலின் தனது டுவிட்டரில் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்அதில், , “உள்ளார்ந்த அன்புடன் பழகிடும் இனிய நண்பர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்குப் பிறந்தநாள் நல்வாழ்த்துகள்! 72-ஆவது அகவையில் அடியெடுத்து வைக்கும் அவர், இன்னும் பல ஆண்டுகள் தமிழ் மக்களைத் தன்னிகரற்ற தனது திரையாளுமையால் மகிழ்விக்கவும்; நல்ல உடல்நலத்துடன் திகழவும் விழைகிறேன்.” என்றும் குறிப்பிட்டுள்ளார்.

நடிகர் கமல்ஹாசன் விடுத்துள்ள பிறந்தநாள் வாழ்த்தில் இனிய நண்பர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்குப் பிறந்தநாள் நல்வாழ்த்துகள். அவர் நல்ல ஆரோக்யத்துடன் பல்லாண்டுகள் வாழ்ந்து ரசிகர்களை மகிழ்விக்க மனதார வாழ்த்துகிறேன்.இவ்வாறு அவர் தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். 

இந்நிலையில், ரஜினிகாந்தின் இந்த 72-ஆவது பிறந்தநாளில், TNPSC நடத்தும் குரூப் தேர்வுகளுக்கு ரஜினிகாந்த் அறக்கட்டளைகள் மூலம் சமூகத்தின் ஏழை மற்றும் விளிம்புநிலை வகுப்பைச் சேர்ந்த 100 மாணவர்களுக்குப் பயிற்சி அளிக்கப்படவுள்ளதாக ரஜினிகாந்த் அறிவித்திருக்கிறார். இந்த தகவலை ரஜினி மக்கள் மன்ற நிர்வாகி சுதாகர் தெரிவித்துள்ளார்.