‘எனிமி’ படத்தயாரிப்பாளருடன் மீண்டும் ‘கூட்டணி’ அமைத்த விஷால்!

நடிகர்கள் விஷால், ஆர்யா, மிருணாளினி ரவி, மம்தா மோகன்தாஸ்ஆகியோரது நடிப்பில்,ஆனந்த் ஷங்கர்இயக்கத்தில், கடந்த தீபாவளிக்கு வெளியானதிரைப்படம், எனிமி.

இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. வினோத்குமார்இப்படத்தை தயாரித்து இருந்தார்.

இந்நிலையில்,. தற்போது நடிகர் விஷால் மீண்டும் தயாரிப்பாளர் வினோத்குமாருடன் அடுத்த படத்திற்காக இணைந்துள்ளார்.

ஆதிக் ரவிச்சந்திரன் எழுதி இயக்க உள்ள இப் படம் பான் இந்தியா திரைப் படமாக உருவாக உள்ளதாகவும் இதன் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் தொடங்க  உள்ளதாகவும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.