சமந்தாவுக்கென தெலுங்கு தேசத்தில் ஆடியன்ஸ் இருக்கிறார்கள். அவர்கள் நடிப்பினால் கவரப்பட்டு ரசிகர்கள் ஆனவர்கள்.
அவர்களுக்கு சமந்தாவின் கவர்ச்சி வேடம்,அயிட்டம் டான்ஸ் ஆகியவை பிடிக்கவில்லை. அவரது முகத்துக்கு கவர்ச்சி சரிப்பட்டு வராது என்பது தெரியும். ஆனாலும் புஷ்பா திரைப்பட விளம்பரங்களால் கவரப்பட்டவர்கள் சமந்தாவை வித்தியாசமாக எதிர்பார்த்தார்கள்
.அய்யகோ..!
அல்லு அர்ஜுனின் சாம்ராஜ்யத்தில் கவர்ச்சி ஆட்டம் கவிழ்ந்து போயிற்று.!
அல்லு அர்ஜுனை பற்றியும் இயக்குனர் சுகுமாரன் பற்றியுமே மக்கள் பேசி வருகிறார்கள்.
சமந்தாவின் கவர்ச்சி ஆட்டம் முகம் சுளிக்க வைக்கிறது என்பதாகவே மெஜாரிட்டியினரின் கருத்து இருக்கிறது.
சிலர் நன்றாக இருப்பதாக சொல்கிறார்கள்.
“சமந்தா இது போன்ற கவர்ச்சி ஆட்டங்கள் போடக்கூடாது .செக்சியாகவும் நடிக்கக்கூடாது என்பதாக சொல்கிறார்கள்.
“நான் சமந்தாவின் ரசிகன். ‘ஓஒ ஆண்டவா .’பாடல் ஆட்டம் எனக்கு பிடிக்கவில்லை.உடம்பு காட்டுவது அசிங்கமாக இருக்கிறது” ஹைதராபாத்தை படம் பார்த்த ஒருவர் வீடியோ பதிவில் கூறி இருக்கிறார்.












