‘பாலிவுட் பிக்பி’ அமிதாபச்சன், கரன் ஜோகர், நாகார்ஜுனா, ரன்பீர் கபூர், ஆலியா பட் உள்பட பல பிரபலங்கள் நடித்துள்ள திரைப்படம் ’பிரம்மாஸ்திரம்’. மூன்று பாகங்களாக உருவாக உள்ள இந்தப் படத்தின் முதல் பாகம் அடுத்த ஆண்டு செப்டம்பர் 9-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி மற்றும் கன்னடம் ஆகிய 5 மொழிகளில் வெளியாகும் இப் படத்தை இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமவுலி வெளியிட உள்ளார் இது குறித்து எஸ்.எஸ்.ராஜமவுலி கூறியிருப்பதாவது,” ’பிரம்மாஸ்திரம்’ திரைப்படத்தை நான்கு தென்மொழிகளிலும் ரசிகர்களுக்கு வழங்குவதில் நான் உண்மையிலேயே மகிழ்ச்சியடைகிறேன். ’பிரம்மாஸ்திரம்’ படத்தின் கரு தனித்துவம் மிக்கது., இது பாகுபலி படப்பிடிப்பு நாட்களை எனக்கு நினைவூட்டுகிறது.இந்தத் திரைப்படம் நவீன தொழில்நுட்பம் மற்றும் அதிநவீன விஎப்எக்ஸ் உடன் இணைத்து உங்கள் மனதைக் கவரும் வகையில் உருவாக்கபட்டுள்ளது!
கரண்ஜோகர் நல்ல படங்களை கண்டுணர்வதில் ஆழ்ந்த புரிதலும், உணர்வும் கொண்டவர், அவருடன் மீண்டும் சேர்ந்து, ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோ உடன் இணைந்து இந்தப் படத்தை வழங்குவதில் பெருமைப்படுகிறேன்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.