அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் முதல் முறையாக போலீஸ் அதிகாரியாக நடிக்கும் படம் “நெஞ்சுக்கு நீதி”. இப்படத்தின் கதாநாயகியாக நடிகை தான்யா ரவிச்சந்திரன் நடிக்கிறார்.
முக்கிய கதாபாத்திரத்தில் ஆரி அர்ஜுனன், ஷிவானி ராஜசேகர் நடிக்க இவர்களுடன் மயில் சாமி, சுரேஷ் சக்ரவர்த்தி, இளவரசு, ‘ராட்சசன்’ சரவணன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர் சில தினங்களுக்கு முன்பு இப்படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகி இணையதளங்களிலும், வலைத்தளங்களிலும் வைரலானது குறிப்பிடத்தக்கது.
இப்படம் இந்தியில் அனுபவ் சின்ஹா இயக்கத்தில்,ஆயூஷ்மான் குரானா,இஷா தல்வார் ஆகியோரது நடிப்பில் கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற ஆர்டிகள் 5 என்ற படத்தின் ரீமேக்காகும்.
இப்படத்தின் டப்பிங் பணிகள் தற்போது தொடங்கியுள்ளது.இப்படத்தின் நாயகன் உதயநிதி ஸ்டாலின் தனது காட்சிகளுக்கான டப்பிங் பணிகளைத் தொடங்கியுள்ளா
இந்திய காவல் பணியில் முதன் முதலாக பயிற்சிகுப் பின் ஒரு ஊரில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டாக உதயநிதி பதவி ஏற்கிறார். அந்த ஊரில் ஏழைச் சிறுமிகள் இரண்டு பேர் பாலியல் கொடுமைக்கு ஆளாகி, கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டு மரக்கிளையில் கட்டி தொங்கவிடப்படுகின்றனர்.
நெஞ்சம் பதைபதைக்கவைக்கும் இச்சம்பவத்தை விசாரிக்கும் பொறுப்பை தானே முன்னின்று நடத்துகிறார் ரஞ்சன். இதற்கு காவல் நிலையத்தில் தனக்கு கீழ் வேலைபார்க்கும் காவலர்களே ஒத்துழைக்க மறுக்கிறார்கள். ஏனெனில் அனைவரும் சாதியின் தீவிரம் பேசுபவர்களாகவே உள்ளார்கள்.
அதோடு அவ்வூரில் உள்ள உயர் சாதியினரின் குறுக்கீடும் விசாரணைக்கு தடைபோடுகிறது. ஆனாலும் அவ்வூரில் நடக்கும் வன்முறையை தடுத்து நிறுத்துகிறார்.இது தான் இப்படத்தின் திரைக்கதை என்பது குறிப்பிடத்தக்கது.தமிழுக்காக சில மாற்றங்களை செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.