வெளியீட்டுக்கு தயாரான விஷாலின் ‘வீரமே வாகை சூடும்’!

விஷால் ஃபிலிம் பேக்டரி சார்பில் அறிமுக இயக்குநர் து.பா. சரவணன் இயக்கத்தில் நடிகர் விஷால் நடித்து வரும்  திரைப்படம் “வீரமே வாகை சூடும் “.இப்படத்தில் விஷால் ஜோடியாக டிம்பிள் ஹயாதி நடிக்கிறார். இவர்களுடன்,யோகிபாபு, மாரிமுத்து, துளசி, கவிதா பாரதி,ஆர் என் ஆர்  மனோகர்,  பாபுராஜ், பில்லி முரளி, ரவீனா, கே எஸ் ஜி வெங்கடேஷ், மஹா காந்தி, மரியம் ஜார்ஜ்,’பிளாக் ஷீப்’ தீப்தி ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்கிறார்கள். இப்படத்தின் அனைத்து கட்ட பணிகளும் முடிந்து  தற்போது  வெளியீட்டுக்கு தயாராகி வருகிறது. வரும் 2022 ஜனவரி 26 அன்று படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளது படக்குழு.இந்நிலையில் இப்படத்தின் டீசரை  இன்று படக்குழு வெளியிட்டுள்ளது .பாண்டியநாடு படத்திற்கு பிறகு, விஷால் நடிப்பிற்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாகிவரும் படம் “வீரமே வாகை சூடும் “. அதிகார பலம் படைத்தவர்களை எதிர்கொள்ளும்   சாமானியன் ஒருவனின் கதையில்  விஷாலின் மாறுபட்ட நடிப்பில் உருவாகியுள்ளது இப்படம். அனைத்து ரசிகர்களும் ரசிக்கும் வகையிலான கமர்ஷியல் ஆக்சன் படமாக இப்படம் உருவாகியுள்ள இப்படம் ஐதராபாத்தின் பல பகுதிகளிலும்,  சென்னையை சுற்றியுள்ள பகுதிகளிலும் படமாக்கப்பட்டுள்ளது.கவின் ராஜ்  ஒளிப்பதிவில்  யுவன் சங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைத்து வருகிறார்.